/tamil-ie/media/media_files/uploads/2022/08/ed.webp)
சென்னையை சேர்ந்த சுரானா நிறுவனத்துக்கு சொந்தமான 67 காற்றாலை உட்பட ரூ.54 கோடி மதிப்புடைய 75 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
சுரனா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம், சுரானா பவர் லிமிடெட் மற்றும் சுரனா கார்ப்பரேஷன் லிமிடெட் போன்றவை ஐ.டி.பி.ஐ மற்றும் எஸ்.பி,ஐ ஆகிய வங்களிடமிருந்து ரூ.3,968 கோடி பணத்தை கடனாக பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் கடனாக ரூ.1,301.76 கோடி ஐ.டி.பி.ஐ வங்கியில் இருந்தும், சுரானா பவர் லிமிடெட் ரூ.1,495.76 கோடி ஐ.டி.பி.ஐ வங்கியில் இருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் ரூ. 1,188.56 கோடி எஸ்.பி.ஐ வங்கியில் இருந்தும் கடன் பெற்றுள்ளன.
ஆனால் இந்த கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக, அந்த நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த கடன் தொகையை வைத்து சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா மற்றும் நிறுவன ஊழியர்கள் ஆனந்த் மற்றும் பிரபாகரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை ஜூலை 12 ஆம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சுரானா நிறுவனத்துக்குச் சொந்தமான 67 காற்றாலை உட்பட ரூ. 54 கோடி மதிப்புடைய 75 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.