ஆத்தூரில் விவசாயிகள் இருவருக்கு சாதி பெயரை குறிப்பிட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், வனத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த 2 விவசாயிகள் கண்ணையன் ( வயது 72), கிருஷ்ணன் சேலம் மாவட்டம் ஆத்தூரில் 6.5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கிறார்கள். நிலத்தகராறு தொடர்பான சட்டபூர்வ மோதலில் ஈடுபட்டுள்ளதாக, அமலாக்கத்துறை உதவி இயக்குநர் ரித்தேஷ்குமார் கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி சம்மன் அனுப்பி உள்ளார். இந்நிலையில் இந்த சம்மனில் விவசாயிகள் சாதியை குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் பெரும் எதிர்ப்பை கிளப்பி உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் புதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் வனத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ள காட்டு விலங்குகளை கொன்று விட்டதாக வனத்துறையினர் புகார் அளித்ததாகவும். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வனத்துறை அதிகாரிகள் அனுப்பிய புகாரில் சாதி பெயரை குறிப்பிட்டு அனுப்பி உள்ளதாவும் அமலக்கத்துறை அதிகாரிகள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“