போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், ஜாபர் சாதிக்கை தனியாக காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மெதம்படமைன் என்ற போதைப் பொருள் தயாரிக்க பயன்படும் முக்கிய வேதிப்பொருளான சூடோபெட்ரின் கடத்தப்படுவதாக, டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த மார்ச் 15-ம்தேதி போலீஸார் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ சூடோபெட்ரின் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் என்.சி.பி போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். இவர் தி.மு.க சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராகவும், சினிமா தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். ஜாபர் சாதிக்கிற்கு போதைப் பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதாக, செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை என்.சி.பி 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், ஜாபர் சாதிக்கை தனியாக காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யபட்டுள்ள ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஜாபர் சாதிக்கை என்.சி.பி விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத்துறை புகுந்துள்ளது. மேல்ம், ஜாபர் சாதிக் சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், ஜாபர் சாதிக்கை விரைவில் தனியாக காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத் துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், போதைப் பொருள் கடத்தலில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை இனி விசாரிக்க தொடங்கும் என்று தெரியவந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“