பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் சென்னை அலுவகலத்தில் இருந்து ரூ. 8.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொழிலதிபர் சான்டியகோ மார்ட்டின், லாட்டரி விற்பனை மற்றும் விநியோகம் செய்ததில் சுமார் ரூ. 900 வரை முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டி, அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினரின் சோதனை நடைபெற்றது. குறிப்பாக, சென்னை, கோவை மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுக்கு சம்பந்தப்பட்ட இடங்களான ஃபரிதாபாத், லுதியானா மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
முன்னதாக, மார்ட்டினின் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் என்ற நிறுவனம், சிக்கிம் மாநில லாட்டரி விநியோகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அதன்பேரில், கடந்த ஆண்டு மே மாதம் மார்ட்டின் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதில், ரூ. 457 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ரூ. 158 கோடி மதிப்பிலான வைப்பு நிதி உள்ளிட்டவை அடங்கும்.
முன்னதாக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் பத்திரம் மூலமாக ரூ. 1368 கோடியை மார்ட்டின் வழங்கினார். இதையடுத்து அவர் மீது பதிவு செய்யப்பட்ட எஃபஐஆர்-ஐ தமிழக காவல்துறை திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“