தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை (ஜூலை 17) சோதனை நடத்தினார்கள்.
இந்தச் சோதனையானது சைதாப்பேட்டை மற்றும் விழுப்புரத்தில் உள்ள அவரது வீடுகள் உள்பட 7 இடங்களில் நடந்தது.
இந்தச் சோதனையின் நிறைவில் பொன்முடி விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் செல்லப்பட்டார். நள்ளிரவிலும் அவரிடம் விசாரணை நடந்தது.
தொடர்ந்து அதிகாலை 3 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சைதாப்பேட்டையில் உள்ள வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது அவரிடம் இன்று மதியம் 4 மணிக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் வழங்கப்பட்டது. இந்த நிலையில், அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், அமைச்சர் பொன்முடியின் ரூ.41.9 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், “சோதனையின் போது, பல்வேறு குற்றச்சாட்டு ஆவணங்கள், ₹ 81.7 லட்சம் ரொக்கம், வெளிநாட்டு நாணயம் (பிரிட்டிஷ் பவுண்டுகள்) தோராயமாக ₹ 13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.41.9 கோடி நிலையான வைப்புக்கள் முடக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“