/indian-express-tamil/media/media_files/x2safDwbRAnFdR0xHxCG.jpg)
தமிழ்நாடு முழுவதும் உள்ள குவாரிகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
ED inspects quarry sites: தமிழ்நாடு முழுவதும் உள்ள குவாரிகளை ஆய்வு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், சட்டவிரோத மணல் அகழ்வு குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அமலாக்க இயக்குனரகத்தின் (ED) அதிகாரிகள் அக்டோபர் 8, 2023 ஞாயிற்றுக்கிழமை, தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரி தளங்களுக்குச் சென்று ஸ்டாக்யார்டுகளில் கிடைக்கும் மணலை அளந்து, சமீப காலங்களில் வெட்டிய மணலின் அளவை மதிப்பீடு செய்தனர்.
முன்னதாக, செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்கு, குவாரி அதிபர்களின் வீடு, அலுவலகங்கள் உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம்ஆற்று மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில், சட்டவிரோதமாக மணல் விற்கப்படுவதாகவும், இதனால் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்திவருகின்றார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us