Advertisment

திருச்சி மணல் குவாரிகளில் மீண்டும் இ.டி சோதனை; ரிவர் சர்வேயர், ஹைட்ரோ சர்வேயர் மூலம் ஆய்வு

திருச்சி மணல் குவாரியில் மீண்டும் அமலாக்கத்துறையினர் மீண்டும் சோதனை; ஐ.ஐ.டி மாணவர்கள் உதவியுடன் ரிவர் சர்வேயர், ஹைட்ரோ சர்வேயர் கொண்டு சோதனை

author-image
WebDesk
New Update
trichy sand quarry

திருச்சி மணல் குவாரியில் மீண்டும் அமலாக்கத்துறையினர் மீண்டும் சோதனை; ஐ.ஐ.டி மாணவர்கள் உதவியுடன் ரிவர் சர்வேயர், ஹைட்ரோ சர்வேயர் கொண்டு சோதனை

திருச்சி மாவட்டத்தில் தாளக்குடி, நொச்சியம் மாதவப் பெருமாள் கோவில், கொண்டையம்பேட்டை ஆகிய பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான மணல் குவாரி செயல்பட்டு வந்தது. அரசின் அனுமதியோடு செயல்பட்டு வந்த குவாரியில் கடந்த செப்டம்பர் மாதம் 12-ம் தேதி காலை 8.30 மணி முதல் இரவு 7 மணி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

Advertisment

ஒரு நாளைக்கு எத்தனை லாரிகள் வருகிறது? எவ்வளவு அனுமதி பெற்று வருகிறது, அனுமதியின்றி எத்தனை லாரிகள் வருகிறது, அதற்கான பணம் எவ்வளவு வசூல் செய்யப்படுகிறது, மணல் குவாரியில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து சோதனைகள் செய்தனர்.

ஒரு நாளைக்கு 50 லாரிகள் வரை தான் மணல் எடுக்க அனுமதி இருந்த பொழுதும் 500 லாரிகளில் மணல் எடுக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சுமார் 7 மணி நேர சோதனைக்கு பின்பு இது தொடர்பாக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் உதவியாளர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்பின்னர் அதிகாரிகள் 3 பேரையும் அமலாக்க துறையினர் தங்களது காரில் கூடுதல் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மேலும், கடந்த மாதம் 17 ஆம் தேதி மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூடிய குவாரியில் சோதனை செய்தனர்.

இந்த நிலையில் இன்று ஐ.ஐ.டி மாணவர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் கொள்ளிடம் ஆற்றில் எவ்வளவு ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்டது என்பது குறித்து ரிவர் சர்வேயர், ஹைட்ரோ சர்வேயர் எனப்படும் கருவியை கொண்டு அளவீடு செய்தனர். மேலும் அளவீடு பணி முடிந்த பின்னரே நிலவரம் தெரியவரும். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Trichy Sand Quarries
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment