Advertisment

கனிம வளத்துறை கட்டுப்பாட்டு அறையில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை கனிம வளத்துறை கட்டுப்பாட்டு அலுவலத்தில் சோதனை; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

author-image
WebDesk
Sep 12, 2023 21:37 IST
அமலாக்கத்துறை திடீர் சோதனை

சென்னை கனிம வளத்துறை கட்டுப்பாட்டு அலுவலத்தில் சோதனை; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கனிம வளத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணல் குவாரி தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisment

தமிழகத்தில் காலை முதல் புதுக்கோட்டை, திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை, அண்ணா நகரில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் முகப்பேர் கிழக்கு பகுதியில் உள்ள பொதுப்பணி  திலகம் என்ற பொறியாளர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல்லில் 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் ரத்தினம், அவரது மைத்துனர் வீடுகள் மற்றும் தொழிலதிபர் கோவிந்தன் என்பவர் வீட்டிலும்  அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டையில் தொழிலதிபர் ராமச்சந்திரன் என்பவருடைய அலுவலகம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை  அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் கரூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் விளாத்திகுளத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.   

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கனிம வளத்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கனிமவளத்துறை அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், இந்த சோதனையானது யார் யார் வீடுகளில் நடத்தப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் விரைவில் வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடத்தப்படும் சோதனைகளின் அடிப்படையில், அங்கு கிடைக்கப்பெறும் பொருட்களை வைத்து, மேலும் சில இடங்களில் சோதனை நடத்தப்பட்ட அமலாக்கத் துறை திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

#Enforcement Directorate #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment