கரூர் மாவட்டத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்ட விரோத பணப்பரிமாற்றம் புகார் தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது, அவரது சகோதரரின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
இதையடுத்து, அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி விடுதலை செய்த நிலையில், அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார். இந்த சூழலில், கரூரில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று காலை சுமார் 9 மணி முதல் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
/indian-express-tamil/media/media_files/2025/03/06/GTrNv4C7FXD8P1mj0spX.jpg)
அந்த வகையில், ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் மணி, கோதை நகரில் வசிக்கும் சக்திவேல் மற்றும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரருமான எம்.சி.எஸ். சங்கர் ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/03/06/WwsyZzgoETiobh9GHlsn.jpg)
சுமார் 20 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது
செய்தி - க.சண்முகவடிவேல்