Advertisment

பொன்முடி வீட்டில் ரெய்டு: இ.டி.யை வைத்து மிரட்ட முடியாது - தலைவர்கள் கண்டனம்

அமைச்சர் பொன்முடி வீட்டில் பா.ஜ.க அரசு அரசியல் நோக்கத்துக்காக அமலாக்கத்துறையைப் பயனபடுத்தி சோதனை நடத்தி மிரட்டுவதாக மல்லிகார்ஜுன கார்கே, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
ED raid at Ponmudi house and office, Mallikarjuna Kharge Kejriwal and other leaders condemns, பொன்முடி வீட்டில் ரெய்டு, இ.டி.யை வைத்து மிரட்ட முடியாது, மல்லிகார்ஜுன கார்கே, அரவிந்த் கெஜ்ரிவால், தலைவர்கள் கண்டனம், ED raid, Ponmudi, Mallikarjuna Kharge, Kejriwal, leaders condemns

பொன்முடி வீட்டில் ரெய்டு: இ.டி.யை வைத்து மிரட்ட முடியாது - தலைவர்கள் கண்டனம்

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை இயக்குநரக அதிகாரிகள் துணை ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

அதே போல, விழுப்புரம் சண்முகபுரம் காலனி பகுதியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றானர். அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்.பி-யுமான கௌதம சிகாமணி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இது மட்டுமல்லாமல் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி சூர்யா கல்லூரியில் சோதனை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அலுவலகங்களில் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு அரசியல் நோக்கத்துக்காக அமலாக்கத்துறையைப் பயனபடுத்தி சோதனை நடத்தி மிரட்டுவதாக மல்லிகார்ஜுன கார்கே, அரவிந்த் கெஜ்ரிவால், கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியளர்களிடம் பேசினார். அப்போது மு.க. ஸ்டாலின் கூறியதாவது: “பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஏற்கனவே பாட்னாவில் கூட்டத்தை கூட்டி முடிவுகளை எடுத்தோம். தொடர்ந்து கர்நாடகாவில் இன்றும் நாளையும் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் 24 கட்சிகள் பங்கேற்கின்றன.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூட்டம் நடத்துவதால் பா.ஜ.க ஆட்சிக்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அமலாக்கத்துறையை சோதனை செய்ய அனுப்புகின்றனர். ஏற்கனவே வட மாநிலங்களில் இந்த பணிகளை செய்து கொண்டிருந்தனர். தற்போது தமிழ்நாட்டிலும் செய்து கொண்டிருகின்றனர் இதற்கு தி.மு.க கவலைப்படவில்லை.

இன்று பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பொய்யாக போடப்பட்ட வழக்கு.

கடந்த 10 ஆண்டு காலம் அ.தி.மு.க-தான் ஆட்சியில் இருந்தது. அப்போது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சமீபத்தில் 2 வழக்குகளில் இருந்து பொன்முடி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சட்ட ரீதியாக அவர் இந்த வழக்கை சந்திப்பார். வரும் தேர்தலில் இதற்கெல்லாம் மக்கள் சரியான பதிலை வழங்குவர். ஏற்கனவே ஆளுநர் எங்களுக்காக தேர்தல் பிரச்சாரத்தை செய்துகொண்டிருக்கிறார். தற்போது அமலாக்கத்துறை அவருடன் சேர்ந்து கொண்டது. எனவே எங்களுக்கு தேர்தல் வேலை சுலபமாக இருக்கும், இந்த கூட்டம் மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சியை அகற்றுவதற்கான கூட்டம். தற்போது ஒட்டுமொத்த நாட்டையும் அச்சுறுத்தி வருகிறது பா.ஜ.கதான்” என்று அவர் கூறினார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சென்னையில் உள்ள வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். ஜூலை 17, திங்கள்கிழமை தி.மு.க அமைச்சரின் விழுப்புரம் இல்லத்தில் சோதனை நடத்துகிறார்கள். பெங்களூரில் ஜூலை 17 மற்றும் 18-ம் தேதிகளில் நடைபெறவிருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு முன்னதாகவே இந்த சோதனைகள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை மல்லிகார்ஜுன கார்கே குறிப்பிட்டார். “முக்கியமான எதிர்க்கட்சி கூட்டத்திற்கு சற்று முன்பு தமிழக கல்வி அமைச்சர் டாக்டர் பொன்முடிக்கு எதிரான அமலாகத்துறை இயக்குநரக ரெய்டுகளை நாங்கள் கண்டிக்கிறோம்” என்று மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதே போல ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவால், “அமலாக்கத்துறையைக் கொண்டு அனைவரையும் மிரட்ட நினைக்கிறார்கள்; அமலாக்கத்துறை மூலம் இந்திய நாட்டினை கட்டுப்படுத்தவோ பயமுறுத்தவோ முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Ponmudi Mallikarjuna
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment