சென்னையில் மார்ச் 6 ஆம் தேதி அமலாக்கத்துறை முக்கிய மதுபான நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை குறிவைத்து பல சோதனைகளை நடத்தியது.
சோதனை செய்யப்பட்ட இடங்களில் எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகை கட்டிடத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் தலைமையகமும் அடங்கும்.
எனவே டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட தனியார் மதுபான உற்பத்தியாளர்களின் வளாகங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதேபோல சென்னை பாண்டி பஜாரில் அமைந்துள்ள திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான அக்கார்டு டிஸ்டில்லர்ஸ் அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பெரிய மதுபான நிறுவனமான எஸ்என்ஜே டிஸ்டில்லர்ஸ் அலுவலகத்திலும் சோதனை செய்யப்பட்டது.
மதுபானத் துறையில் நிதி முறைகேடுகள் குறித்த தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த ரெய்டுகள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.