/indian-express-tamil/media/media_files/2025/01/03/tZoTPau9sQ73N38oorYw.jpg)
தி.மு.க பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீட்டில் இன்று(ஜன.3) காலை முதல் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் துரைமுருகன் வீடு, கிங்ஸ்டன் கல்லூரி, பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது உறவினர் வீடு மற்றும் கிடங்கு ஆகிய இடங்களில் ரெய்டு நடைபெறுகிறது. அமைச்சர் துரைமுருகனும் அவரது மகனும் , திமுக எம்.பியுமான கதிர் ஆனந்த்தும் காட்பாடியில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். தற்போது, அந்த வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் 35க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
2019ம் ஆண்டு தேர்தலின்போது வேலூரில் திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து ரூ.11 கோடி பணத்தை வருமான வரித் துறை பறிமுதல் செய்தது. 2019 தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க இந்த பணம் வைக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த பண விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையும் தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தற்போது அந்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.