சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு: சென்னை உட்பட நாடு முழுவதும் 12 எஸ்.டி.பி.ஐ அலுவலகங்களில் இ.டி சோதனை

தமிழகம் உட்பட நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை மண்ணடி எஸ்.டி.பி.ஐ அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ED raids SDPI offices across India including chennai Tamilnadu Tamil News

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் எஸ்.டி.பி.ஐ தேசியத் தலைவர் ஃபைசி கைதானார். இந்த நிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். டெல்லி, திருவனந்தபுரம், மலப்புரம், நந்தியால் (ஆந்திரப் பிரதேசம்), பாகூர் (ஜார்க்கண்ட்), தானே (மகாராஷ்டிரா), பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, லக்னோ மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட 12 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. 

Advertisment

சென்னையில் சோதனை 

இந்நிலையில், தமிழகத்தில் சென்னை மண்ணடியில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மண்ணடியில் அமைந்துள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்திற்கு நான்கு வாகனங்களில் வந்த அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதையொட்டி பாதுகாப்புக்காக அந்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில்ல சோதனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் பரவியதால், அந்த பகுதியைச் சோ்ந்த எஸ்.டி.பி.ஐ கட்சியினா், இளைஞா்கள் ஏராளமானோா் கட்சி அலுவலகம் முன்பு திரண்டு சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளைக் கண்டித்து கோஷமிட்டனா். இதனால், அந்தப் பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

Advertisment
Advertisements

சட்டவிரோத மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) அமைப்பை மத்திய அரசு கடந்த செப்டம்பர் 2022 இல் தடை செய்தது. தடைசெய்யப்பட்ட  பி.எஃப்.ஐ அமைப்புடன் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

Enforcement Directorate Sdpi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: