/indian-express-tamil/media/media_files/2025/08/16/ed-raid-2-2025-08-16-09-28-54.jpg)
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் இ.டி. சோதனை: அவரது மகன், மகள் வீடுகளிலும் ரெய்டு
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்பட அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகார்கள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை பசுமைவழிசாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவல்லிக்கேணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் உள்ள ஐ.பெரியசாமியின் அறையிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள வீடுகளிலு சோதனை நடந்து வருகிறது.
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் இ.டி. சோதனை: அவரது மகன், மகள் வீடுகளிலும் ரெய்டு#EDpic.twitter.com/ITPZSh2cEh
— Indian Express Tamil (@IeTamil) August 16, 2025
அமைச்சரின் மகனும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமாரின் சீலப்பாடி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. திண்டுக்கல் சிவாஜி நகரில் உள்ள ஐ.பெரியசாமியின் மகள் இந்திராவின் வீட்டிலும் சோதனை நடக்கிறது.
அமைச்சர் ஐ.பெரியசாமி மீது ஏற்கனவே இருந்த வழக்குகள் .
வருமானத்திற்கு அதிகமான சொத்து வழக்கு: 2006-2011 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது, ரூ.2.1 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக 2012-இல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. திண்டுக்கல் நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து அவரை விடுவித்தது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக ஐ.பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு: வீட்டு மனைகளை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், 2022-இல் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராகி சுமார் 8 மணி நேரம் விளக்கம் அளித்திருந்தார். அப்போது, அவர் "சட்ட விதிகளுக்கு மாறாகச் செயல்பட்டதில்லை" என்றும், "எத்தனை வழக்குகள் வந்தாலும் சந்திக்கத் தயார்" என்றும் கூறியிருந்தார்.
அமலாக்கத்துறை எந்த வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் சோதனை நடத்துகிறது என்பது குறித்த அதிகாரபூர்வமான விளக்கம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. தமிழகத்தின் மூத்த அமைச்சர்களில் ஒருவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுவதால், அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் இந்தச் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், கே.என்.நேரு, பொன்முடி, ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களிலும் இ.டி. சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் ஐ.பெரியசாமியும் சேர்க்கப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.