தமிழக அரசின் திருத்த மனு செவ்வாய்க்கிழமை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழக (டாஸ்மாக் - TASMAC) தலைமையகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழக (டாஸ்மாக்) தலைமையகத்தில் அமலாக்கத்துறை இயக்குநரகம் (ED) கடந்த மார்ச் 6 முதல் மார்ச் 8 வரை மேற்கொண்ட சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழ்நாடு அரசு தனது கோரிக்கையை திருத்தியுள்ளது.
அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் முழு சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையையும் சட்டவிரோதமானது என்று அறிவிக்கவும், அமலாக்கத்துறை தனது ஊழியர்களைத் துன்புறுத்துவதைத் தடுக்கவும் டாஸ்மாக் தாக்கல் செய்த இரண்டு தனிநபர் மனுக்களுடன் சேர்த்து, மாநில அரசின் திருத்த மனுவும், நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.