அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA), 1999-ன் விதிகளின் கீழ் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முறைகேடுகளைக் கண்டுபிடிக்க இரண்டு நாட்கள் சோதனை நடத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
சென்னையில் உள்ள முன்னணி சிமென்ட் உற்பத்தி மற்றும் சிமெண்ட் விநியோகம் செய்யும் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் வளாகத்தில் அமலாக்க இயக்குனரகம் (இ.டி) அதிரடி சோதனை நடத்தியது. ஜனவரி 31 புதன்கிழமை மற்றும் பிப்ரவரி 1, 2024 வியாழக்கிழமை 2 நாட்கள் இந்தியா சிமெண்ட்ஸ் அலுவலகத்தில் சோதனை நடத்தியது.
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA), 1999-ன் விதிகளின் கீழ் இந்த நிறுவனத்தின் முறைகேடுகளைக் கண்டுபிடிக்க இரண்டு நாட்கள் சோதனை நடத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் இ.டி-யின் சில அதிகாரிகள் சென்னையில் உள்ள அதன் நிறுவன அலுவலகத்திற்குச் சென்று அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA), 1999-ன் விதிகளின் கீழ் முறைகேடுகளைக் கண்டுபிடிக்க சோதனை நடத்தியதாக இந்தியா சிமெண்ட்ஸ் பங்குச் சந்தைகளுக்குத் தெரிவித்துள்ளது.
“அவர்கள் கோரிய அனைத்து விளக்கங்கள் / ஆவணங்களையும் நாங்கள் வழங்கினோம் / சமர்பித்தோம். மேற்கூறிய விசாரணை தொடர்பாக நிறுவனத்தின் மீது எந்தவொரு பொருள் தாக்கத்தையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று அந்த நிறுவனம் பங்குச் சந்தைக்கு தகவல் தெரிவித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“