திருச்சி: மணல் குவாரிகளில் இ.டி மீண்டும் ஆய்வு

சுமார் ஒரு மாத காலத்திற்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் திருச்சி நொச்சியம் மாதவப்பெருமாள் கோவில் தாளக்குடி, கொண்டையம்பேட்டை மணல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

சுமார் ஒரு மாத காலத்திற்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் திருச்சி நொச்சியம் மாதவப்பெருமாள் கோவில் தாளக்குடி, கொண்டையம்பேட்டை மணல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

author-image
WebDesk
New Update
 ED searches sand quarries in Trichy again Tamil News

இந்த மணல் குவாரிகளில் கடந்த மாதம் 12ம் தேதி 3-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு கார்களில் வந்து ஆய்வு செய்தனர்.

க.சண்முகவடிவேல்

Trichy | enforcement-directorate:தமிழகத்தில் கடந்த மாதம் மணல் குவாரிகளை மையம் வைத்து அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் புதுக்கோட்டையை சேர்ந்த மணல் குவாரி ஓப்பந்ததாரர்  உள்ளிட்ட சில மணல் மாபியாக்களை சுற்றி வளைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

Advertisment

இந்த நிலையில், மீண்டும் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மாதவப்பெருமாள் கோயில், தாளக்குடி, நொச்சியம் கொண்டையம்பேட்டை ஆகிய பகுதியில் செயல்பட்ட மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த மணல் குவாரிகளில்  கடந்த மாதம் 12ம் தேதி  3-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டு கார்களில் வந்து ஆய்வு செய்தனர். 

அப்போது, கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வந்த மணல் குவாரி மற்றும் மணல் இருப்பு வைத்திருக்கும் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். பல முக்கிய ஆவணங்கள் சிக்கிய நிலையில், சுமார் ஒரு மாத காலத்திற்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் நொச்சியம் மாதவப்பெருமாள் கோவில் தாளக்குடி, கொண்டையம்பேட்டை மணல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டனர். 

Advertisment
Advertisements

இந்த ஆய்வுக்குப் பிறகு செயல்படாத நிலையில் இருக்கும் கொண்டையம்பேட்டை மணல் குவாரியில் தற்போது ஸ்டாக் பாயிண்ட்டில் உள்ள மணல் அளவு எவ்வளவு? நாள் ஒன்றுக்கு எவ்வளவு மணல் விற்பனை செய்யப்படுகிறது? அனுமதிக்கப்பட்ட அளவில் மணல் விற்கப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகளிடம் அமலாக்க துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திடீர் ஆய்வால் மணல் மாபியாக்கல் மீண்டும் அச்சத்தில் இருக்கின்றனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Trichy Enforcement Directorate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: