Advertisment

செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாருக்கு பிடிவாரண்ட் கோரி மனு; இ.டி நடவடிக்கை

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் இதுவரை ஆஜராகவில்லை. அதனால், அசோக்குமாரைக் கைது செய்ய பிடிவாரண்ட் கோரி அமலாக்கத்துறை வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தது.

author-image
WebDesk
New Update
ED Ashok Kuma

செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாருக்கு பிடிவாரண்ட் கோரி அமலாக்கத்துறை மனு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் இதுவரை ஆஜராகவில்லை. அதனால்,  அசோக்குமாரைக் கைது செய்ய பிடிவாரண்ட் கோரி அமலாக்கத்துறை வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தது.

Advertisment

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்டவிரோத பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில், அமைச்சா் வி.செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை  அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனா். இதைத் தொடர்ந்து,  அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை முடிந்த பிறகு, ஆகஸ்ட் 12-ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். 

கரூர், ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சா் செந்தில் பாலாஜி வீட்டிற்கு வியாழக்கிழமை அதிகாலை வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கேரளம் மாநில பதிவெண் கொண்ட இரண்டு வாகனங்களில் வந்த 5-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரில் ராமேஸ்வரப்பட்டியில் இல்லத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தந்தை வேலுச்சாமி மற்றும் பழனியம்மாள் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.  அதில் தலைமறைவாக இருக்கும், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குறித்தும், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும், அந்த வீட்டில் உள்ள படுக்கை அறை ஒன்றை சீல் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் இதுவரை ஆஜராகவில்லை. அதனால்,  அசோக்குமாரைக் கைது செய்ய பிடிவாரண்ட் கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.

மேலும், கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்ய இ.டி முடிவு செய்துள்ளது. அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்தும், அசோக்குமார் இதுவரை ஆஜராகவில்லை. அதனால், செந்தில் பாலாஜியின் சகோரர் அசோக்குமார் அவரது பெற்றோரைப் பார்க்க வந்தாரா என்பது குறித்து ஆய்வு செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் இதுவரை ஆஜராகவில்லை. அதனால்,  அசோக்குமாரைக் கைது செய்ய பிடிவாரண்ட் கோரி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்தும், அசோக்குமார் இதுவரை ஆஜராகவில்லை.  செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. அவர் இதுவரை ஆஜராக வில்லை.  அசோக் குமார் ஆஜராகததால் அவரைக் கைது செய வாரண்ட் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களுடன் வியாழக்கிழமை (08.02.2024) மனு தாக்கல் செய்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

V Senthil Balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment