தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 25 மணல் குவாரிகள் குறித்து, மத்திய அரசின் அமலாக்கத்துறை ஒப்பந்ததாரர்களை வரவழைத்து, விவரங்களை சேகரித்து வருகிறது.
தமிழகத்தில் ஆற்று மணல் அள்ளுதல் மற்றும் விற்பனை செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார்கள் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்கத்துறை தற்போது 10 மாவட்ட ஆட்சியர்களை விசாரணைக்கு அழைத்துள்ளது.
அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் வரும் நாட்களில் விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 25 மணல் குவாரிகள் குறித்து, மத்திய அரசின் அமலாக்கத்துறை ஒப்பந்ததாரர்களை வரவழைத்து, விவரங்களை சேகரித்து வருகிறது.
சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்ட மணல், மணல் விற்பனை பற்றிய விவரங்களை சேகரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே நீர்வளத் துறையின் பொறியாளர்களை விசாரித்தனர். விசாரணைக்குள்ளான அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களை நோக்கி கை காட்டியதாகக் கூறப்படுகிறது. ஆற்றில் மணல் அள்ளுவதைப் பொறுத்த வரையில், மாவட்ட ஆட்சியர்களே பொறுப்பான உயர் அதிகாரி ஆவார்.
அமலாக்கத்துறை ஏற்கனவே இந்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி பல்வேறு மணல் குவாரிகளில் திடீர் சோதனைகளை நடத்தியது. சி.சி.டி.வி தரவு சேமிப்பு சாதனங்கள், கணினி ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் போலி ரசீதுகள் மற்றும் போலி க்யூ.ஆர். குறியீடுகள் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றியது. இது தொடர்பாக, மணல் அள்ளுதல் மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தி மேற்பார்வையிடும் நீர்வளத்துறைக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“