money laundering case | actor Prakash Raj | திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த நகைக் குழுமத்திற்கு எதிராக 100 கோடி ரூபாய் போன்சி மற்றும் மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ்ராஜ்-ஐ விசாரணைக்கு அமலாக்க இயக்குனரகம் அழைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை (நவ.23) தெரிவித்தன.
இந்த ஜூவல்லரியில் நவ.20ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.23.70 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.
இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் பிரகாஷ் ராஜ் (58) இருந்துள்ளார். இந்த நிலையில், அடுத்த வாரம் சென்னையில் உள்ள ஃபெடரல் ஏஜென்சி முன் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். இந்தி மற்றும் தென்னிந்திய திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ள நடிகர், பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அமலாக்கத் துறை ( enforcement-directorate) வழக்கு தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவின் எஃப்ஐஆரில் இருந்து வருகிறது. போலீஸார் கூற்றின்படி, பிரணவ் ஜூவல்லர்ஸ் தங்க நகை சீட்டு திட்டம் என பொதுமக்களிடம் இருந்து ரூ.100 கோடி வரை வசூலித்துள்ளனர்.
ஆங்கிலத்தில் வாசிக்க : ED summons actor Prakash Raj in Rs 100 crore ponzi-linked money laundering case
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“