Advertisment

தமிழகத்தில் மணல் குவாரி முறைகேடு: வரி ஏய்ப்பு குறித்து ஐ.டி, ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு இ.டி கடிதம்

சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவது தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, விசாரணை அதிகாரிகள் ஐ.ஐ.டி - கான்பூரின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி அனைத்து மணல் குவாரி இடங்களிலும் தொழில்நுட்ப ஆய்வை மேற்கொண்டனர்.

author-image
WebDesk
New Update
Sand mafia x

தமிழகத்தில் மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளும் முறைகேடுகளை விசாரித்து வரும் அமலாக்க இயக்குனரகம், வரி ஏய்ப்பை சுட்டிக்காட்டி உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருமான வரித்துறைக்கும் ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகத்தில் மணல் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளும் முறைகேடுகளை விசாரித்து வரும் அமலாக்க இயக்குனரகம், வரி ஏய்ப்பை சுட்டிக்காட்டி உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருமான வரித்துறைக்கும் ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

Advertisment

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 12, 2023-ல் பல இடங்களில் உள்ள மணல் குவாரிகளில், மணல் விற்பனை செய்யும் இடங்களில், அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகங்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தனியார் நபர்கள் உட்பட பல இடங்களில் அமலாக்க இயக்குனரகம் (இ.டி) சோதனை நடத்தியது. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஜி.எஸ்.டி வரி இழப்புகளை பரிந்துரைத்து, போலியான மணல் விற்பனை ரசீதுகள் மற்றும் போலி க்யூ.ஆர் குறியீடுகள் உள்ளிட்ட குற்றஞ்சாட்டக்கூடிய ஆவணங்களை இ.டி கண்டுபிடித்தது.

இது குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, விசாரணை அதிகாரிகள் ஐ.ஐ.டி - கான்பூரின் நிபுணத்துவத்துடன் அனைத்து மணல் குவாரி இடங்களிலும் ட்ரோன்கள், ஒளி கண்டறிதல் மற்றும் ரேங்கிங் (LiDAR) கணக்கெடுப்பு, பாத்திமெட்ரிக் பகுப்பாய்வு மற்றும் செயற்கைக்கோள் பட செயலாக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தொழில்நுட்ப ஆய்வு நடத்தினார்கள். மணல் குவாரி தோண்டும் இடங்களிலும் அதை ஒட்டிய பகுதிகளிலும் அதிகளவு தோண்டப்படுவதாக நடப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மணல் அகழ்வின் உண்மையான விலை ரூ. 4,730 கோடி என மதிப்பிடப்பட்ட நிலையில், கணக்குப் புத்தகத்தில் காட்டப்பட்டுள்ள வருவாய் ரூ. 36.45 கோடி மட்டுமே என ஏஜென்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அமலாக்க இயக்குனரகம் வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி ஆகிய இரண்டிற்கும் எழுதிய கடிதத்தில், மணல் அள்ளும் பெரிய இயந்திர உற்பத்தியாளர்களான எம். கோபெல்கோ கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் இந்தியா (பி) லிமிடெட் மற்றும் எம்/எஸ். ஜே.சி.பி இந்தியா லிமிடெட் நிறுவனம், தமிழகத்தில் உள்ள 16 வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 273 மணல் அள்ளும் இயந்திரங்களை வழங்கியது தெரியவந்தது.

ஜி.பி.எஸ் இருப்பிட ஒருங்கிணைப்புகள் மற்றும் பிற தரவுகளின் அடிப்படையில், இந்த அகழ்வாராய்ச்சிகள் 28 இடங்களில் மணல் அள்ளுவதற்குப் பயன்படுத்தப்பட்டன என்பதையும் நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு மணல் அள்ளும் இயந்திரங்களைப் பொறுத்தமட்டில் வேலை நேரம் மற்றும் செயலற்ற நேரம் பற்றிய தரவுகளின் விவரங்களையும், தோராயமாக தோண்டப்பட்ட மொத்த மணலின் அளவையும் அவர்கள் அளித்துள்ளனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது நடக்கிறது என்பது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி.யின் உட்கூறுகளின் மொத்தக் குறைவான அறிக்கையைத் தவிர, ஒப்பந்ததாரர்கள் மற்றும் மணல் அள்ளும் இயந்திரங்களின் உரிமையாளர்கள் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோத மணல் குவாரிகள் மூலம் கிடைத்த மொத்த வருவாயையும் மறைத்து, கருவூலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக இ.டி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Enforcement Directorate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment