scorecardresearch

‘மாயமானும் மண் குதிரையும்’: தினகரன்- ஓ.பி.எஸ்., சந்திப்பை கேலி செய்த எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

aiadmk

“மாய மானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது”, என்று தினகரன் மற்றும் ஓ.பி.எஸ்.,இன் சந்திப்பை எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

சேலம் மாவட்டத்தின் அதிமுக கட்சியில் சமீப காலங்களில் பிரச்னைகள் நடந்து வருவதால், டிடிவி தினகரன் மற்றும் ஓ.பி.எஸ்., சந்திப்பு மேற்கொண்டனர். இதுகுறித்து அதிமுக தரப்பில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இதை தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “ரூ.30,000 கோடி ஊழல் தொடர்பான ஆடியோ வெளியான நிலையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நான் எந்த சொத்தும் இதுவரை வாங்கவில்லை, விவசாயம் மட்டுமே செய்து வருகிறேன். 1989ம் ஆண்டுக்கு பிறகு என்னிடம் எந்த சொத்தும் கிடையாது. திமுகவின் தூண்டுதலின் பேரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டி.டி.வி., தினகரன் மற்றும் ஓ.பி.எஸ்., சந்திப்பானது காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்ததை போன்ற நிலை தான்.

டி.டி.வி., தினகரன் ஓ.பி.எஸ்., இணைந்தது மாயமானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போல் தான் உள்ளது. கிரிக்கெட் மட்டும் பார்க்காமல் சபரீசனையும் பார்த்தால் தி.மு.க.,வின் பி.டீம் ஓ.பி.எஸ்., என உறுதியாகி உள்ளது”, என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Edapaadi pazhanisamy teases o paneerselvam and dhinakaran meet