அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கிய நிலையில், சட்டமன்ற துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை நியமித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே ஒற்றை தலைமை விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவிக்க அவரை கட்சியில் இருந்து நீக்கினார்.
இந்த நிலையில், சட்டமன்ற துணை தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியான அறிக்கையில், ‘அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல் சட்டமன்ற துணை செயலாளராக அக்ரி எஸ் கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளார். சட்டமன்ற துணை தலைவர் பதவி ஓ.பன்னீர் செல்வம் வகித்துவந்தது ஆகும். இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுக சட்டமன்ற துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சபாநாயகர் அப்பாவிடம் கடிதம் அளித்தார்.
இந்தக் கடிதத்தை முழுமையாக படித்த பிறகே முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் குழப்பங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.