யார் விருப்பப்படாலும் ராமர் கோயிலுக்கு செல்ல முடியும் என்று எதிர்கட்சித் தலைவர் இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவர் இ.பி.எஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் பேசியதாவது ” யார் விருப்பப்பட்டாலும் , எந்த சாதி, மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், ராமர் கோவிலுக்குச் செல்லலாம். எனக்கு வாய்ப்பு இருந்தால் நான் கலந்துகொள்வேன். தற்போது எனக்கு காலில் வலி உள்ளதால், கலந்துகொள்வேனா ? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். பெரியார் பல்கலைக்கழக தேர்வு தொடர்பாக இப்போது பேச முடியாது பிரச்சனை நீதிமன்றம் வரைக்கும் சென்றுள்ளது. நீங்கள் பிடித்ததை பத்திரிக்கையில் எழுதுகிறீர்கள். இதுவரை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு நடைபெறவில்லை. தலைமைக்கழகம் முறைப்படி அறிவிப்பை வெளியிடும். தலைமைக் கழகம் வெளியிடும் வேட்பாளர் படிவத்தை பூர்த்தி செய்து, வழங்க வேண்டும். இதில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை தலைமைக் கழகம் முடிவு செய்யும்,
வெள்ள பாதிப்புகளில் எப்படி திமுக செயல்பட்டது என்பதை பத்திரிக்கையாளர்களான நீங்கள் தொடர்ந்து பதிவு செய்துள்ளீர்கள். மிக்ஜாம் பூயலில் பெரிய காற்று இல்லை. மின்கம்பங்கள், மரங்கள் சாயவில்லை. கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆனால் விடியாத தி.மு.க அரசு மற்றும் அதன் அமைச்சர்கள் மழை நீர் எங்கும் நிற்கவில்லை என்றும் வேகமாக வடிந்துள்ளதாக ஊடங்களில் பொய்களை சொன்னார்கள். அவர்கள் கட்டிய வடிகால் மூலம் எல்லா தண்ணீரும் வடிந்துவிட்டது என்று பொய் கூறினார்கள். மக்களும் அந்த பொய்யை நம்பிவிட்டார்கள்.
மழை நீர் வடிகால் அமைக்கும் பணி முழுவதுமாக முடிந்ததாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும் சொன்னார். சென்னை மாநகரத்தில் உள்ள அமைச்சர்களும்,முதலமைச்சரும் இதைதான் சொன்னார்கள். ஆனால் கனமழைக்கு பிறகு வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது. 3 நாட்கள் வரை யாருக்கும் உணவு கிடைக்காத நிலை உள்ளது என்பதை தொலைக்காட்சியில் பார்த்தோம். இப்படி நிலை இருக்க. முழுமையான வடிகால் வசதி செய்து கொடுத்ததாக அமைச்சர்கள் பொய் சொன்னார்கள். சென்னையில் பெய்த மழையை பாடமாக எடுத்துக்கொண்டு தென் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கலாம் .
ஒரு வாரத்திற்கு முன்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கு எச்சரிக்கை விடுத்தபோதும் எந்த முன்னெச்சரிக்கையும் செய்யப்படவில்லை. தூத்துக்குடி, திநெல்வேலி மாவட்டங்களில் கனமழையால் மக்கள் பாதிக்கப்பட்டபோதும் அரசு போர்கால நடவடிக்கை எடுத்து உதவி செய்திருக்க வேண்டும், ஆனால் முதல்வரோ டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுவிட்டார். அவர்களுக்கு ஆட்சி அதிகாரம்தான் தேவை. ஓட்டு செலுத்தி தேர்வு செய்த மக்களை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. போக்குவரத்து பணியாளர்களின் அடிப்படை கோரிக்கையை கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை, இதனால்தான் அவர்கள் போராட்டம் செய்யத் தள்ளப்பட்டார்கள். நீதிமன்ற உத்தரவால் பணிக்கு திரும்பி உள்ளனர்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“