Advertisment

குறைந்த மழைக்கே தத்தளிக்கும் சென்னை: திருப்புகழ் கமிட்டி பரிந்துரைப்படி எடுத்த நடவடிக்கை என்ன? - இ.பி.எஸ் கேள்வி

குறைந்த அளவு பெய்த மழைக்கே சென்னை தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் திருப்புகழ் கமிட்டி பரிந்துரைகள்படி எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
eps press meet

திருப்புகழ் கமிட்டி பரிந்துரைகள்படி எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

குறைந்த அளவு பெய்த மழைக்கே சென்னை தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் திருப்புகழ் கமிட்டி பரிந்துரைகள்படி எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்தது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்ததால், பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. தமிழக அரசும் சென்னை மாநகராட்சி நிர்வாகமும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தது. இருப்பினும், மழைநீர் தேங்கியது குறித்த புகார்கள் எழுந்தன.

இதனிடையே, தமிழக அரசு 4,000 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் அமைக்க மேற்கொண்ட பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். 


இந்நிலையில், குறைந்த அளவு பெய்த மழைக்கே சென்னை தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் திருப்புகழ் கமிட்டி பரிந்துரைகள்படி எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க-வின் 53-ம் ஆண்டு ஆண்டு விழா நடைபெற்றது. அந்த வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதைத் தொடர்ந்து,  அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “பொன்விழா கண்ட கட்சி அ.தி.மு.க. இக்கட்சி பல்வேறு சாதனைகளை புரிந்திருக்கிறது.” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னையில் கடந்த 3 நாட்களாக பெய்த மழை குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்தது. ஆனால், மழை அதிகளவில் பெய்யவில்லை. வெயில்தான் அடிக்கிறது. இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் வடியாமல் மக்கள் தவிப்பதை பார்க்க முடிகிறது. 20 செ.மீ. மழை பெய்தால்கூட தண்ணீர் தேங்காது என முதல்வரும், அமைச்சர்களும் கூறினர். தற்போது முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உட்பட அனைவரும் மழைநீர் எங்கும் தேங்கவில்லை என பொய் கூறிவருகிறார்கள்” என்று சாடினார். 

மேலும், “தமிழகத்தில் மழை மட்டும்தான் பெய்துள்ளது. அதற்கே இந்த அரசு மிகவும் அலறுகிறது. அ.தி.மு.க பல புயல்களை கண்டது, தானே புயல், ஒக்கி புயல், வர்தா புயல், கஜா புயல் என பல புயல்களை கண்டுள்ளது. அதேவேளையில், புயல் வேகத்தில் மக்களுக்காக பணியாற்றி, அவர்களின் பிரச்சினையைத் தீர்த்துள்ளது. அ.தி.மு.க-வை குறை சொல்வதற்கு யாருக்கும் தகுதி கிடையாது.” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் மழையின்போது யாரும் களத்திற்கு வரவில்லை தி.மு.க ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் உள்பட அனைவரும் களத்தில் இருப்பதாக அமைச்சர் சேகர் பாபு கூறியது குறித்தும் கொடுக்கப்பட்டது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆளுநர் அரசைப் பாராட்டியது குறித்தும் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “தூய்மைப் பணியாளர்களுக்கு டீ வாங்கி கொடுத்தால் எல்லாம் முடிந்து விடுமா? தூய்மை பணியாளர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கிய அரசாங்கம் இந்த அரசாங்கம். அ.தி.மு.க ஆட்சியில்தான் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை கிடைத்தது. மழைக் காலத்திலும், வெள்ளம் ஏற்பட்ட போதிலும் தூய்மை பணியாளர்களுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு இழப்பு ஏற்படும்போது உரிய நிவாரணமும் கொடுக்கப்பட்டது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆளுநர் அரசைப் பாராட்டியது குறித்து அவரிடம்தான் கருத்து கேட்க வேண்டும். நான் எதுவும் சொல்ல முடியாது” என்று கூறினார். 

அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க இரண்டாகிவிட்டது, அ.தி.மு.க பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையைக் கூட இனி உபயோகிக்க வேண்டாம். பிரிந்து சென்றவர்கள் இன்று எத்தனையோ அவதாரங்களை எடுக்கிறார்கள். ஒன்றாக இருப்பதால்தான் இத்தனை பேர் இங்கு நிற்கின்றோம். அ.தி.மு.க பிரிந்து கிடக்கிறது என சொல்லாதீர்கள். அ.தி.மு.க ஒன்று தான். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை இனி மீண்டும் சேர்க்க வாய்ப்பு இல்லை. எங்கள் தரப்பில் இருப்பதுதான் அ.தி.மு.க. கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் அனைவரும் நீக்கப்பட்டு விட்டார்கள்.” என்று கூறினார்.

செய்தியாளர்களிடம் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட வடிகால் பணிகளை முடிக்காததால் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எஞ்சிய மழைநீர் வடிகால் பணிகளை தி.மு.க அரசு முழுமையாக செய்திருந்தால் சென்னையில் இப்பிரச்சினை இருந்திருக்காது. அ.தி.மு.க பணிகளை தி.மு.க தொடர்ந்திருந்தால் மழைநீர் தேங்கி இருக்காது. திருப்புகழ் கமிட்டி அறிக்கையின்படி எடுத்த நடவடிக்கைகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

மேலும், “வெள்ளை அறிக்கை கேட்டால் முதிர்ச்சி இல்லாமல் பதில் அளிக்கிறார் உதயநிதி ஸ்டாலின். பெரிதாக மழை பெய்யாததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கவில்லை, ஒருவேளை தொடர்ந்து மழை பெய்திருந்தால் நம்மால் வெளியேகூட சென்றிருக்க முடியாது. பல்வேறு அமைச்சர்கள் கவனிக்க வேண்டிய துறைகளை துணை முதல்வர் ஒருவரே கவனிக்கிறார். அனுபவம் வாய்ந்த அமைச்சர்களுக்கு பதில் துணை முதல்வர் மட்டுமே வேலை செய்கிறார். நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை என அனைத்து துறைகளையும் உதயநிதி ஸ்டாலினே கவனிக்கிறார். அனுபவம் பெற்ற அமைச்சர்களின் அறிவுரைகளை கேட்காமல், உதயநிதியை முன்னிலைப்படுத்தவே தி.மு.க முயல்கிறது. குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. முதல்வர் ஸ்டானின் தொகுதியில் தேங்கியுள்ள நீரே வடியாமல் கிடக்கிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் சென்னையில் உள்ள நீரை எப்படி இவர்கள் வடிய வைக்கப் போகிறார்கள்” என்று எடப்படி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment