/indian-express-tamil/media/media_files/2025/09/09/edappadi-k-palani-samy-admk-coimbatore-election-campaign-tamil-news-2025-09-09-18-48-44.jpg)
இன்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஜூலை மாதம் ஏழாம் தேதி கோவை மாவட்ட மேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து அவர் மாநிலம் முழுவதும் தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். 4 வது கட்ட பிரச்சாரத்தை கடந்த ஒன்னாம் தேதி மதுரையில் தொடங்கிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு இருந்து திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
இந்நிலையில், இன்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அ.தி.மு.க வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து செல்வபுரம் ரோடு ஷோ செல்கிறார். தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவில் மைதானத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அங்கு இருந்து ராம செட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர், கோவை புதூர் வழியாக குனியமுத்தூர் சென்று பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
தொடர்ந்து ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவு வழியாக சுந்தராபுரம் சென்று மக்கள் மத்தியில் பேசுகிறார். அதன் பிறகு ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி, கிணத்துக்கடவு வழியாக செல்லும் அவருக்கு கோதவாடி பிரிவில் இரவு வரவேற்பு கொடுக்கப்படுகிறது. பின்னர் இரவு பொள்ளாச்சி செல்லும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொள்ளாச்சி நகர எல்லையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாளை பொள்ளாச்சி, வால்பாறை, திருப்பூர் மாவட்டம், உடுமலை சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
அதன் பின்னர் வருகிற 13-ஆம் தேதி மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம் தொகுதிகளிலும் 12 ஆம் தேதி திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம் தொகுதிகளிலும் தீவிர சுற்றுப் பயணம் செய்யும் இடம் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 13 ஆம் தேதி மீண்டும் கோவை வருகிறார். அன்று காலை 11 மணி அளவில் தொழில்துறையினருடன் கலந்துரையாடல் நடத்தும் அவர், பீளமேடு ஜிவி ரெசிடென்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலக மைதானத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். தொடர்ந்து செல்லும் அவர் பழைய பேருந்து நிலையத்தை திறந்து, பேருந்து நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அதன் பின்னர் காரணம்பேட்டை, கருமத்தம்பட்டி வழியாக ஓசூர் சாலை அவிநாசியில் பேசுகிறார். தொடர்ந்து அவர் சேலம் புறப்பட்டு செல்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.