Advertisment

அ.தி.மு.க ஆட்சியில் ஒரு பி.எச்.சி-கூட திறக்கவில்லையா? அரசாணையைக் காட்டி அமைச்சர் மா.சு-வுக்கு இ.பி.எஸ் பதிலடி

அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்கூட திறக்கப்படவில்லை என்று அமைச்சர் மா. சுப்பிமணியன் கூறியதற்கு, 42 சுகாதார நிலையங்கள் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Ma Su EPS

மா. சுப்பிமணியன் - எடப்பாடி பழனிசாமி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்கூட திறக்கப்படவில்லை என்று அமைச்சர் மா. சுப்பிமணியன் கூறியதற்கு, 42 சுகாதார நிலையங்கள் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisment

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியும்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வியாழக்கிழமை ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடர்பாக கடும் வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி தனது அரசு, 42 ஆரம்ப சுகாதர நிலையங்கள் (பி.எச்.சி - PHC) அமைக்க பிறப்பித்த உத்தரவுகளைக் காட்டிப் பேசினார்.

நடப்பு தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், “எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது ஒரு சுகாதார நிலையம்கூட அமைக்கப்படவில்லை, தி.மு.க ஆட்சிக் காலத்தில் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை கூறினார். அமைச்சர் மா. சுப்பிரமணியனின் இந்த கருத்தை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை பேசினார்.

“12 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைப்பதற்கான அரசாணை எண். 467 டிசம்பர் 2017-ல் வெளியிடப்பட்டது மற்றும் 30 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைப்பதற்கான அரசாணை எண். 91 மார்ச் 2018-ல் வெளியிடப்பட்டது. மொத்தத்தில், 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள் முந்தைய ஆட்சியில் அமைக்கப்பட்டது” என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, ஊடகங்களில் வெளிவந்த அமைச்சரின் சட்டப் பேரவைக் கருத்துக்களை மறுத்துப் பேசினார்.

இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறுக்கிட்டு,  “எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தாலும், அவரது ஆட்சிக் காலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று கூறினார். 2017 மற்றும் 2021-க்கு இடையில் அவரது ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான ஒரு உத்தரவு கூட பிறப்பிக்கப்படவில்லை என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறினார். பின்னர், உத்தரவு நகல்களைக் காட்டிய எடப்பாடி பழனிசாமி, இரண்டு உத்தரவுகளும் தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டவை என்று கூறினார். அமைச்சர் மா. சுப்பிரமணியனின் இந்த கருத்துகளை நீக்குவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அரசாணை உத்தரவு நகலை சபாநாயகர் எம்.அப்பாவிடம் சமர்ப்பிக்குமார் தி.மு.க அவை முன்னவர் துரைமுருகன் கேட்டுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறுவதில் ஒன்றும் செய்யவில்லை. “உரிய இடத்தில் கேட்டால்தான் நிதி வரும். அ.தி.மு.க போராடி நிதி பெற்றது. பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தீர்களா? உங்கள் எதிர்ப்பின் காரணமாக எத்தனை முறை சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்தீர்கள்? நீங்கள் ஒன்றும் செய்யவில்லை” என்று கூறிய பழனிசாமி, காவிரி நீருக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அ.தி.மு.க உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தை நினைவு கூர்ந்தார். அதனால், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் பல நாட்கள் ஒத்திவைக்கப்பட்டது. அ.தி.மு.க-வினர் பல்வேறு பிரச்னைகள் குறித்து கேட்டதற்கு முதல்வரிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்று குற்றம் சாட்டினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Edappadi Palanisamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment