எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தி.மு.க-வின் ஆர். எஸ் பாரதி தொடர்ந்த வழக்கை நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
AIADMK Edappadi K Palaniswami Tamil News: அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறையில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக கூறப்படும் விவகாரத்தில், தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி தொடர்ந்த வழக்கை நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Advertisment
இதனிடையே, டெல்லியில் 38 கட்சிகள் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடியின் அருகில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் தேசிய அளவில் அ.தி.மு.க.வுக்கு பாரதீய ஜனதா கட்சி மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நிருபர் ஒருவர், 'உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருக்கு, ரொம்ப சந்தோசமாக இருக்கீங்க சார்' என்றார். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, 'சாதகமாக இல்லை, உண்மைக்கு தீர்ப்பு கிடைத்துள்ளது' என்றார்.
Advertisment
Advertisements
இதனிடையே குறுக்கிட்ட நிருபர், 'மோடிக்கு வலது பக்கத்திலே இடம் கிடைச்சுருக்கு' என்றார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'அப்படியெல்லாம் இல்லை. உங்களுடைய கேள்வியே தவறாக இருக்கிறது. அதாவது நீதிமன்றத்தில் அப்படியெல்லாம் தவறாக கொடுக்கு முடியாது.' என்று கூறினார். அவர் பேசிக்கொண்டிருக்கையில் நிருபர் குறுக்கிட்டு 'சந்தோசமாக இருக்கீங்க' என்பதை சுட்டிக்காட்ட அதற்கு உடனே கொதித்தெழுந்தார் எடப்பாடி பழனிசாமி.
மோடி அவரிடம் நெருக்கமாக இருப்பதாக நிருபர் குறிப்பிட்ட நிலையில், அதற்கு எடப்பாடி பழனிசாமி, 'அவர் என்னிடம் மட்டும் இல்லை. எல்லோரிடமும் நெருக்கமாகத் தான் இருக்கிறார். எல்லாக் கட்சிக்கும் நாங்கள் உரிய மரியாதை அளிப்போம் என்று அவரே பேசியிருக்கிறார்." என்றார்.
அந்த வழக்கு பற்றி சிறுகுறிப்பு எனத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, "டெண்டர் நடந்தது. ஆனால் அது ரத்தாகிவிட்டது. அதில் 400 கோடி ஊழல் என்கிறார்கள். டெண்டர் ரத்து செய்யப்பட்ட பிறகு அந்த டெண்டரை இரண்டாக பிரித்து இரண்டு பேர் எடுத்து பணி செய்து கொண்டு இருக்கிறார்கள். முன்னதாக டெண்டர் கோரியவருக்கு டெண்டர் போடவில்லை. ஆனால், குறிப்பிட்ட தொகை ஊழல் செய்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டது.
இன்னொன்று, ஆட்சிக்கு வருவதற்கு முன் அவர் உறவினருக்கு அவர் முதலமைச்சராக இருந்த காலத்தில் 18 கோடி ரூபாய் கொடுத்ததாக கூறினார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அந்த பணியெல்லாம் முடிந்த பிறகு திமுக அரசு தான் அவருக்கு அந்த தொகையை கொடுத்தது. இப்படி தவறான, பொய்யான வழக்கை தொடர்ந்ததில் தான் நேற்றைய தினம் நீதிபதி கடுமையாக எச்சரித்து இருந்தார்." என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil