Advertisment

ஊடகத்தை முடக்க முயற்சி; தி.மு.க-வுக்கே உரிய பாசிச குணம்: இ.பி.எஸ் கண்டனம்

சவுக்கு மீடியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆளும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Edappadi K Palaniswami condemns TN CM MK Stalin for crime murder Tamil News

சவுக்கு மீடியா நிறுவனத்தை முடக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக சவுக்கு சங்கர் தெரிவித்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 Savukku Shankar | Edappadi K Palaniswami | Cm Mk Stalin: அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தலைமையில் இயங்கி வரும் நிறுவனம் சவுக்கு மீடியா பிரைவேட் லிமிடெட். இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக சவுக்கு சங்கர் செயல்பட்டு வருகிறார். இந்த செய்தி நிறுவனத்தின் ஆசியர் அப்துல் முத்தலீப் விலகல், செய்தியாளராக பணியாற்றிய கார்த்திக் கோவிந்தராஜன் கைது, நெறியாளர் லியோ ஸ்டாலின் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போலீசார் மூலம் நெருக்கடி என ஊடக மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்தின் குரல்வலையை நெறிப்பதாக சவுக்கு சங்கர் தெரிவித்தார். 

Advertisment

மக்களவை தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன், ஆளும் தி.மு.க அரசின் மீது தான் வைத்த விமர்சனமே இந்த நெருக்கடிக்கு காரணம் என்றும், 
சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (ஏ.டி.ஜி.பி) ஏ. அருண் ஐ.பி.எஸ் மற்றும் வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன் ஐ.பி.எஸ் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு இதில் முக்கிய பங்குண்டு என்றும் அவர் குற்றம் சாட்டி வருகிறார். 

இ.பி.எஸ் கண்டனம்

இந்நிலையில், சவுக்கு மீடியா நிறுவனத்தை முடக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக சவுக்கு சங்கர் தெரிவித்து வரும் சூழலில், அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக பலரும் இணையம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும், சவுக்கு மீடியா நிறுவன ஊழியர்கள் மீதான போலீசாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் வருகிறார்கள். 

இந்த நிலையில், சவுக்கு மீடியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆளும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விடியா திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் சவுக்கு மீடியா ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் விடியா அரசின் அராஜகப் போக்கிற்கு எனது  கண்டனம்.

ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை தன் கைகளுள் வைத்துக்கொண்டு, தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் மு.க ஸ்டாலின் அவர்கள் திளைத்துக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதனையும் மீறி சில ஊடகங்கள் இந்த விடியா ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம்.

சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட்டு, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்யுமாறு விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்." என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Cm Mk Stalin Edappadi K Palaniswami Savukku Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment