சென்னையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வருகிற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சித் தலைவ சீமானுடன் கூட்டணி வைக்கலாம் என்று அ.தி.மு.க நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்ய நாடாளுமன்றத் தொகுதி வாரியாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக 3-வது நாளாக அரக்கோணம், தஞ்சை தொகுதி நிர்வாகிகளுடன் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அரக்கோணம் மக்களவைத் தொகுதி அ.தி.மு.க நிர்வாகிகள், வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சீமானுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. வளர்ந்து வரும் கட்சிகளுடன் பலமான கூட்டணி அமைத்து வருகிற சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடைந்ததற்கு காரணம் கூட்டணி பலமாக இல்லை, அதனால்தான் தோல்வி அடைந்தொம் என்று அ.தி.மு.க நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அ.தி.மு.க-வுக்கு என்று பிரதமர் வேட்பாளர் என்று அ.தி.மு.க யாரையும் முன்னிறுத்தாததும் தோல்விக்கு காரணம் என்று அ.தி.மு.க நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கு, கூட்டணி குறித்து தலைமை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்படுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுரை கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே போல, ஓ.பி.எஸ், சசிகலாவின் ஆதரவாளர்களை அ.தி.மு.க-வில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“