அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு
அதிமுகவில் யார் சட்டப்பேரவை எதிர்க் கட்சி தலைவர் என்று ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையே கடும் போட்டி நிலவிய சுழலில், எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் யார் சட்டப்பேரவை எதிர்க் கட்சி தலைவர் என்று ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையே கடும் போட்டி நிலவிய சுழலில், எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 65 இடங்களைப் பிடித்துள்ள அதிமுகவில் யார் சட்டப்பேரவை எதிர்க் கட்சி தலைவர் என்று ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையே கடும் போட்டி நிலவிய சுழலில், எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Advertisment
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், அதிமுக ஆட்சியை இழந்தது. இதில் அதிமுக 65 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7ம் தேதி தமிழக முதல்வராக பதவியேற்றார்.
தேர்தலில் 65 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்த அதிமுகவில் சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவர் யார் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் மே 7ம் தேதி நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவருமே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வேண்டும் என்று வாதிட்டதாக செய்திகள் வெளியானது. அதனால், எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க முடியவில்லை.
Advertisment
Advertisements
அன்றைய தினம் நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, தேர்தல் தோல்வி குறித்து முதலில் விவாதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வலியுறுத்தினார்கள்.
அப்போது, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை அன்றைய தினம் முடிவு செய்யவில்லை.
அதே நேரத்தில், அதிமுகவில் உள்ள 65 எம்.எல்.ஏ.க்களில் எடப்பாடி பழனிசாமிக்குதான் அதிக ஆதரவு உள்ளதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, நேற்று (மே 9) அதிமுக மூத்த தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்து ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசினார்கள்.
இந்த சூழலில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் இன்று (மே 10) காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
ஓ.பிஎஸ் - இ.பி.எஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (மே 10) காலை 9.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிமுக சட்டமன்றக் கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், அதிமுகவில் யார் எதிர்க்கட்சி தலைவர் என்று ஓ.பி.எஸ். - இ.பி.எஸ் இடையே நிலவிய கடும்ப் போட்டி முடிவுக்கு வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தமிழத்தின் 16வது சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"