Advertisment

'2026-லும் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை; ஆதங்கத்தில் பேசும் ஓ.பி.எஸ்': இ.பி.எஸ் பேட்டி

கனவு பலிக்காததால் ஓ.பி.எஸ் ஆதங்கத்தில் பேசி வருகிறார் என்றும், 2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Edappadi K Palaniswami latest press meet salem speaks about Annamalai OPS Tamil News

"அ.தி.மு.க.-வில் எந்த குழப்பமும் இல்லை. எந்தப் பிளவும் இல்லை." என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் பதிவாகிய வாக்குகள் கடந்த 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. 

Advertisment

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. இருப்பினும், 20.46 சதவீதம் வாக்குகளை பெற்றது. இந்நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதல் முறையாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் கனவு பலிக்காததால் ஓ.பி.எஸ் ஆதங்கத்தில் பேசி வருகிறார் என்றும், 2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். 

சேலத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி 8 முறை தமிழகத்திற்கு வருகை தந்தார். மேலும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் தமிழகத்திற்கு வந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்கள்.

அதே போல் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி பிரசாரம் மேற்கொண்டார்.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை நான் ஒருவன்தான் எங்கள் கட்சி வேட்பாளர்களையும், கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தேன். அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள், அந்தந்த தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பல்வேறு அவதூறு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இத்தனைக்கும் இடையில் அ.தி.மு.க. இந்த தேர்தலை சந்தித்து 2019 மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட ஒரு சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது. இதை அ.தி.மு.க.விற்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்ற கட்சிகளுக்காக பிரசாரம் மேற்கொண்டார்கள். ஆனால் அ.தி.மு.க. கூட்டணி எந்த ஆதரவும் இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டு, கடந்த முறை பெற்ற வாக்குக்ளை விட 2024 மக்களவை தேர்தலில் கூடுதலான வாக்குகளை பெற்றிருக்கிறது. 

கோவை தொகுதியில் பா.ஜ.க சார்பில் முன்பு போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணனைவிட அண்ணாமலை குறைந்த வாக்குகள் பெற்றுள்ளார். அண்ணாமலை போன்றவர்கள் பா.ஜ.க-வில் இருந்தால் அக்கட்சி தோற்கத்தான் செய்யும். எங்கள் கூட்டணியில் இருந்தபோது, அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அ.தி.மு.க. தான். 

எஸ்.பி வேலுமணிக்கு எனக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக அண்ணாமலை குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அ.தி.மு.க.-வில் எந்த குழப்பமும் இல்லை. எந்தப் பிளவும் இல்லை. கனவு பலிக்காததால் ஓ.பி.எஸ் ஆதங்கத்தில் பேசி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை." என்றும் அவர் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Aiadmk O Panneerselvam Edappadi K Palaniswami Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment