Advertisment

அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம்: இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அறிவிப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி இருவரும் அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக குழுக்கள் அமைத்து நிர்வாகிகளை நியமித்து அறிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Tamil News, EPS - OPS

அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி இருவரும் அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக குழுக்கள் அமைத்து நிர்வாகிகளை நியமித்து அறிவித்துள்ளனர்.

Advertisment

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழகத்தில் ஆளும் அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் வேகமாக தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.

அந்த வகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளை நியமத்து அறிவித்துள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நிர்வாகிகளாக அமைப்புச் செயலாளர்கள் சி.பொன்னையன், நத்தம் விசுவநாதன், செ.செம்மலை, ஜே.சி.டி.பிரபாகர், எஸ்.கோகுல இந்திரா, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், சிறுபான்மை பிரிவு நலச் செயலாளர், அ.அன்வர்ராஜா, மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

தேர்தல் பிரசார குழு நிர்வாகிகளாக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை எம்.பி, துணை செயலாளர்கள் வைகைச் செல்வன், பு.தா.இளங்கோவன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

கட்சியின் சார்பில் செய்தியாளர்களை சந்திக்கும் நிர்வாகிகளாக அமைச்சர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், ஆர்.காமராஜ், ஆர்.பி.உதயகுமார், க.பாண்டியராஜன், கொள்கை துணை பரப்பு செயலாளர் வைகைச் செலவன், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.பி.பி.பரமசிவம் எம்.எல்.ஏ ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

எதிர்க்கட்சிகளின் அறிக்கைகளுக்கு பதில் அளிக்கும் குழுவில் கட்சியின் அமைப்புச் செயலாளர்கள் சி.பொன்னையன், செ.செம்மலை. அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், டாக்டர் சி.விஜயபாஸ்கர், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகைச்செல்வன், முன்னாள் எம்.பி. ரபி பெர்னார்ட், செய்தி தொடர்பாளர்கள் மருது அழகுராஜ், பாபு முருகவேல் ஆகியோர் நிர்வாகிகளாக இருப்பார்கள்.

ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக முன்னாள் எம்.பி. ரபி பெர்னார்ட், செய்தி தொடர்பாளர்கள் மருது அழகுராஜ், இணை ஒருங்கிணைப்பாளர்களாக தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல செயலாளர் அஸ்பயர் கே.சுவாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.” என்று அறிவித்துள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Aiadmk O Panneerselvam Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment