Advertisment

தனியார் ஏஜென்சி மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை தேர்வு செய்ய முயலும் திமுக அரசு: இ.பி.எஸ் கண்டனம்

அரசுப் போக்குவரத்து கழங்களை தனியார் மயமாக்கும் வகையில் வெளியிட்ட ஒப்பந்த புள்ளியை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக அரசை இ.பி.எஸ் வலியுறுத்தி உள்ளார்.

author-image
WebDesk
New Update
இ.பி.எஸ் கண்டனம்

இ.பி.எஸ் கண்டனம்

அரசுப் போக்குவரத்து கழங்களை தனியார் மயமாக்கும் வகையில் வெளியிட்ட ஒப்பந்த புள்ளியை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக அரசை இ.பி.எஸ் வலியுறுத்தி உள்ளார்.

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் ” மகளிருக்கு கட்டணம் இல்லா பயணம் என்று அறிவிக்கப்பட்டு, குறைந்த அளவு  பழைய, பழுதடையக்கூடிய நிலையில் உள்ள பேருந்துகளையே இயக்குவதால் நகரப் பகுதிகளில் மகளிர் தங்களது தினசரி வேலைக்கு செல்லும் நேரத்தை ஒரு மணி நேரம் முன்னதாகவே துவங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

30.9.2023 அன்றைய  தேதி வரை, கருணை அடிப்படையில் பணி கோரி பதிவு செய்துள்ள வாரிசுகளின் எண்ணிக்கை சுமார் 1,087. மேலும் , போக்குவரத்துக் கழங்களுக்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தேர்வுக்கு விளம்பரம் செய்து 18.9.2023 அன்று வரை ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

இதன்மூலம் ஓடுநர், நடத்துனர்களை தேர்ந்தெடுக்காமல், தற்போது தனியார் ஏஜென்சி மூலம் ஓடுநர் நடத்துனர்களை தேர்ந்தெடுக்க முயலும் திமுக அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கனவே, கடந்த ஜூலை மாதம் சென்னை  மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தனியார் ஊழியர்களை அமர்த்த முயற்சித்த தி.மு.க அரசை எதிர்த்து  அனைத்து போக்குவரத்து சங்கங்களும் ஆர்பாட்டம் செய்தன. நானும் இந்த திமுக அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து, நேரடியாக தொழிலாளர்களை நியமிக்க வலியுறுத்தினேன்.

ஆனால் தொழிலாளர் துரோக திமுக அரசு அனைவரது எதிர்ப்பையும் மீறி சுமார் 538 பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தது. இந்த விஷயத்தில் திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வாய்மூடி பேசாமல் இருக்கின்றனர்.

ஏற்கனவே கடந்த ஜூலையில் 538 தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்துவிட்டோம். எனவே தைரியமாக இனி அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கலாம் என்று 2ம் கட்டமாக 30.9.2023 அன்று 117 ஓடுநர்களையும், 117 நடத்துனர்களையும் தனியார் ஏஜென்சி மூலம் நியமிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

இதன்படி, போக்குவரத்துத் துறைக்கு தனியார் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்பையில் ஓட்டுநர், நடத்துனர்கள் நியமிக்கப்பட்டால், போக்குவரத்துத் தொழிலாளர் நலன் இனி பேணி காக்கப்படாது. போக்குவரத்துத்துறையில் இனி 8 மணி நேரம் வேலை கடைபிடிக்க முடியாது. தொழிலாளர்களுக்கு பண்டிகை விடுமுறை, வார ஓய்வு கிடைக்காது. இனி தொழிலாளர்களுக்கு பஞ்சப்படியும், வருடாந்திர ஊதிய உயர்வும் கிடைக்கா நிலை ஏற்படும்.

அரசு போக்குவரத்துத் துறையில் இனி தொழிலாளர் சட்டம் மற்றும் தொழிலாளர் நலன் என்பதே பெயரளவில் மட்டுமே இருக்கும். தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய பல பலன்கள் கிடைக்காத நிலை ஏற்படும்.

எனவே அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்கத் துடிக்கும் திமுக அரசு உடனடியாக 30.9.2023 அன்று வெளியிட்ட ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்ய வேண்டும். பதிவு செய்துள்ள சுமார் 1,087 வாரிசுகளுக்கு கருணை  அடிப்பைடையில்  பணி வழங்க வேண்டும் என்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஓடுநர் மற்றும் நடத்துனர் தேர்வுக்கு விளம்பரம் செய்து, 18.9.2023 அன்று வரை ஆன்லைன் மூலம் பதிவு  செய்துள்ள சுமார் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து நேர்மையான முறையில் தமிழகத்தில் அனைத்துப் போக்குவரத்து கழங்களிலும் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment