'விவசாயிகளுக்கு பலனில்லாத வேளாண் பட்ஜெட்': இ.பி.எஸ் விமர்சனம்

தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு பலனில்லாத பட்ஜெட் என்று எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு பலனில்லாத பட்ஜெட் என்று எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Edappadi K Palaniswami on TN Agriculture Budget Tamil News

'குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும்' என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Edappadi K Palaniswami: 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

Advertisment

இந்த நிலையில், தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு பலனில்லாத பட்ஜெட் என்றும், 'பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை; தென்னை விவசாயிகள், இயற்கை விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை' என்றும் எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  "வேளாண் நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளுக்கு பலனில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை; தென்னை விவசாயிகள், இயற்கை விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. நெல், கரும்பு குறித்த தி.மு.க. வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை பட்ஜெட்டில் அறிவிக்காதது வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் நெல் கொள்முதல் முறையை ரத்து செய்ய வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளிடம் இருந்து கரும்பு முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டது. குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கும் நிலையில், எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை" என்று அவர் கூறினார்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Edappadi K Palaniswami

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: