Advertisment

ஓராண்டு இபிஎஸ் அரசு #ietamil Exclusive : ‘தமிழ்நாடு கம்பீரத்தை இழந்து நிற்கிறது’ - இரா.முத்தரசன்

ஓராண்டு இபிஎஸ் அரசின் செயல்பாடு குறித்து #ietamil Exclusive பேட்டிகளை பெற்றது. அதில் இபிஎஸ் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கிறார், இரா.முத்தரசன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Edappadi K.Palaniswami, One Year Government, Muttharasan, CPI, Marks

Edappadi K.Palaniswami, One Year Government, Muttharasan, CPI, Marks

ச.செல்வராஜ்

Advertisment

ஓராண்டு இபிஎஸ் அரசின் செயல்பாடு குறித்து #ietamil Exclusive பேட்டிகளை பெற்றது. அதில் இபிஎஸ் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கிறார், இரா.முத்தரசன்.

ஓராண்டு இபிஎஸ் அரசின் செயல்பாடுகள் சாதனையா, வேதனையா? என விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு (2017) பிப்ரவரி 16-ம் தேதி தமிழ்நாடு முதல் அமைச்சராக எடப்பாடி க.பழனிசாமி பொறுப்பேற்றார். ஒராண்டை அவரது ஆட்சி கடந்ததையே சாதனையாக குறிப்பிடுவோரும் இருக்கிறார்கள்.

ஓராண்டு இபிஎஸ் அரசு செயல்பாடுகள் குறித்து இங்கு விமர்சிக்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன். ‘எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்ததே எதிர்பாராத நிகழ்வுதான். ஒரு சூழலில் அவரை பயன்படுத்திக் கொண்டனர். இவரது ஆட்சியில் தமிழ்நாடு தனது கம்பீரத்தை இழந்து நிற்கிறது.

இந்தியாவில் தமிழகத்திற்கு ஒரு தனித்துவம் உண்டு. நாடு விடுதலை பெறும் முன்பே இட ஒதுக்கீடுக்கு வித்திட்டது தமிழ்நாடு. இந்தியா முழுவதும் ஏகபோகமாக காங்கிரஸ் ஆண்ட காலத்திலும்கூட, மாநில சுயாட்சியை இங்கு காமரஜர் விட்டுக் கொடுக்கவில்லை.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது, அதற்காக அவருக்கு தஞ்சாவூரில் பாராட்டு விழா நடந்ததை எல்லாம் நாம் அறிவோம். ஆனால் தமிழக மக்கள் ஒன்றுபட்டு போராடி பெற்ற காவிரி உரிமையை கடந்த ஓராண்டு காலத்தில் இந்த அரசு காவு கொடுத்திருக்கிறது. உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை இந்த அரசால் காப்பாற்ற முடியவில்லை. இதனால் டெல்டாவில் இன்று 8 லட்சம் ஏக்கரில் நெற்பயிர் கருகிக் கொண்டிருக்கிறது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களின் கதி என்னவென்றே தெரியவில்லை. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனே, ‘அந்த மசோதா எங்கே இருக்குன்னு தெரியலை’ன்னு சொன்னதை நாம் அறிவோம். அதே நிர்மலா சீதாராமன், ‘நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு பெற அவசர சட்டத்தை தமிழக அரசு இயற்றினாம், மத்திய அரசு உரிய உதவியை செய்யும்’ என்றார்.

ஆனால் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு, ‘ஒரு மாநிலத்திற்கு மட்டும் நாங்கள் வித்தியாசமான முடிவை எடுக்க முடியாது’ என காலை வாரிவிட்டது. அதனால் அனிதா என்கிற மாணவி, ‘நம்மைப் போல சாதாரண வீட்டுக் குழந்தைகள் பிளஸ் டூ-வில் அதிக மதிப்பெண்கள் பெற்றாலும் மருத்துவப் படிப்புக்கு செல்ல முடியாது’ என மனமுடைந்து உயிரை இழந்தார்.

வர்தா புயல் பாதிப்புக்கு உரிய நிதியை மத்திய அரசிடம் பெற முடியவில்லை. வறட்சி பாதிப்பு குறித்து தமிழக அரசு கெஜட்டில் வெளியிட்டும், நிதி உதவி கிடைக்கவில்லை. பக்கத்தில் ஆந்திரா மாநிலத்தில் பாஜக.வின் கூட்டணி கட்சி தங்கள் மாநிலத்திற்கு நிதி கிடைக்கவில்லை என்றதும், பாராளுமன்றத்தை அமளியாக்குகிறார்கள். அதன்பிறகு நிதி கிடைக்கிறது.

ஆனால் இவர்கள் மத்திய அரசுக்கு அடிபணிந்த அரசாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆளுனர் அவராகவே ஆய்வு நடத்துகிறார். தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளும் அதை கண்டிக்கின்றன. முதல்வரும், துணை முதல்வரும், ‘அதில் தவறில்லை’ என்கிறார்கள். சொந்த எம்.எல்.ஏ.க்களின் ஆதரவையும் இழந்துவிட்டு, பதவியை தக்க வைக்க போராடும் பொம்மை அரசாகவே இந்த அரசு தொடர்கிறது.’ என்றார் முத்தரசன்.

‘இந்த ஆட்சியில் பாசிட்டிவான ஒரு அம்சம் கூடவா இல்லை?’ எனக் கேட்டதற்கு, ‘மக்களுக்கு பாசிட்டிவா எதுவும் இல்லை. எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் பாசிட்டிவா சம்பளத்தை ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயா உயர்த்தியிருக்காங்க. மக்களுடன் நேரடி தொடர்பை உருவாக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்தக்கூட இந்த அரசு தயாராக இல்லை.

எல்லாத் துறைகளிலும் லஞ்சமும் ஊழலும் புரையோடிப் போயிருக்கிறது. அதுவும், துணை வேந்தரே கைதாகும் அளவுக்கு! சட்டம் ஒழுங்கும் மகா மோசம்! ஒரு பெண்மணி கழுத்து நிறைய நகைகளை அணிந்துகொண்டு இரவில் நடமாட முடிகிற நாள்தான், சுதந்திரம் கிடைத்ததாக கருத முடியும்’ என்றார் மகாத்மா காந்தி. ஆனால் இங்கு பட்டப் பகலில் கணவருடன் சேர்ந்துகூட போக முடியவில்லை.’ என்றார் முத்தரசன்.

‘இந்த ஆட்சிக்கு உங்களின் மதிப்பெண்கள் எவ்வளவு?’ எனக் கேட்டதற்கு, ‘நூற்றுக்கு போடுவதாக இருந்தால், அந்த ஒன்றை எடுத்துவிட்டுப் போட வேண்டியதுதான் (பூஜ்யம்).’ எனக் கூறினார் முத்தரசன்.

 

Edappadi K Palaniswami Muttharasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment