பழனி முருகன் கோவிலுக்கு திங்கள்கிழமை சென்ற எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்களுடன் சேர்ந்து வழிபாடு மேற்கொண்டார். அவர் தொண்டர்களை தனது அருகே அமரச் சொல்லி அன்பாக கடிந்துகொண்டது அதிமுக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையால் கடந்த சில நாட்களாக திமுகவை விமர்சிக்காமல் இருந்த நிலையில் மீண்டும் திமுக மீது கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை பழனி சென்றார். அங்கு நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இலங்கையில் குடும்ப ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டியது போல தமிழ்நாட்டிலும் நடக்கும். திமுக என்பது குடும்ப கட்சி. ஒரு குடும்பத்திற்காக அந்த கட்சி இயங்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால், அதிமுக என்பது ஜனநாயக கட்சி. ஜனநாயக ரீதியாக இதில் நிர்வாகிகள் தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நாங்கள் மக்கள் நலனில் அக்கறை செலுத்தி வருகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதையடுத்து, இன்று (ஆகஸ்ட் 08) பழனி மலைக்கோயிலில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு வழிபாடு நடத்தினார். அதன்பின், காலசாந்தி மற்றும் சிறுகாலசந்தி போன்ற முக்கிய பூஜைகளை மேற்கொண்டார். பின்னர், கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அதன்பின், போகர் சன்னதியில் சென்று தரிசனம் செய்து விட்டு சிறிது நேரம் தியானம் செய்தார். பிறகு, அங்கு கோவிலில் மக்கள் அமர்ந்து ஓய்வு எடுக்கும் இடத்தில் இவரும் அமர்ந்து ஓய்வு எடுத்தார்.
இந்த நிலையில், எடப்பாடியை பார்க்க வந்த நிர்வாகிகள் பலர் எடப்பாடி இருக்கும் திண்டின் மேல் அமராமல் கீழே தரையில் அமர்ந்தனர். இவர்களை பார்த்ததும்.. யாரும் கீழே அமர கூடாது. தம்பி தம்பி மேலே போய் உட்காரு என்று எடப்பாடி பழனிசாமி அன்பாக கட்டளையிட்டார். தம்பி கீழ உட்காராத.. மேலே போய் உட்காருங்க. ஏன் இப்படி பண்றீங்க என்று அன்பாக கடிந்து கொண்டார். அவரின் செயல் அதிமுக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி கவனம் பெற்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”