அ.தி.மு.க பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும்” என்று ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் நிலவிவருகிறது. இருவரும் சட்டப்போராட்டத்தை நடத்தி வருகின்றன்றனர்.
இதனிடையே, அ.தி.மு.க தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து 51வது ஆண்டுகள் அடியெடுத்து வைத்துள்ளது. இதை, அ.தி.மு.க-வினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், நாமக்கல்லில் நடைபெற்ற அ.தி.மு.க பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி “2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும்” என்று கூறினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசியதாவது: “திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக 3-ஆக உடைந்துள்ளது என கூறுகிறார். அதிமுக ஒன்றாகத்தான் உள்ளது. உடைக்க வேண்டும் என ஸ்டாலின் முயற்சி செய்தால் அது தோல்வியில் தான் முடியும்.
அ.தி.மு.க-வை முடக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறவில்லை. அ.தி.மு.க-வில் பி டீம் ஒன்றை உருவாக்கி பிளவை ஏற்படுத்தி தி.மு.க நினைக்கிறது. அரசியல் ரீதியாக நம்மை எதிர்கொள்ள முடியாத தி.மு.க கொல்லைப்புறமாக வந்து செயல்படுகிறது.
அ.தி.மு,க உடையவில்லை ஒன்றாக இருக்கிறது என்பதை நாமக்கல் பொதுக்கூட்டம் காட்டுகிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை தவிடு பொடியாக்கி மீண்டும் ஆட்சியமைப்போம். காற்றை தடை செய்ய முடியாதது போல, அ.தி.மு.க ஆட்சிக்கு வருவதையும் யாராலும் தடை செய்ய முடியாது.
இந்த கூட்டம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிள்ளையார் சுழி. காலத்தால் அழிக்க முடியாத திட்டங்களை அ.தி.மு.க வழங்கியது. அந்த திட்டங்களை தி.மு.க-வால் கொடுக்க முடியுமா? திட்டங்களை நிறுத்திவிட்டீர்கள், இதற்கான தக்க பதிலடியை வரும் தேர்தலில் மக்கள் கொடுப்பார்கள்.
தி.மு.க-வால் அ.தி.மு.க-வை நேரடியாக எதிர்க்க முடியாது. எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை தவிடுபொடியாக்கி மீண்டும் ஆட்சியமைப்போம். பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான், இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. பொதுக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது.
நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெறுவோம்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.