scorecardresearch

ரூ.30,000 கோடி ஊழல்; பி.டி.ஆர் ஆடியோ பற்றி மத்திய அரசு விசாரிக்க வேண்டும்: இ.பி.எஸ் பேட்டி

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் கூறிய ரூ.30,000 கோடி ஊழல் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு விசாரிக்க வேண்டும்” என்று ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

Edappadi K Palaniswami says Centre should probe on PTR Palanivel Thiagarajan audio, Edappadi K Palaniswami, PTR Palanivel Thiagarajan audio, ரூ.30,000 கோடி ஊழல், பி.டி.ஆர் ஆடியோ பற்றி மத்திய அரசு விசாரிக்க வேண்டும், இ.பி.எஸ் பேட்டி, எடப்பாடி பழனிசாமி பேட்டி, EPS, Rs 30 thousand crore scam allegations
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் கூறிய ரூ.30,000 கோடி ஊழல் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு விசாரிக்க வேண்டும்” என்று ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை ()மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 12 மணி நேரம் பணிபுரிய தொழிலாளர்கள் ஒன்றும் இயந்திரம் இல்லை. 12 மணி நேர வேலை என்பது மனித வாழ்க்கைக்கு சரிவராது.

ஸ்விட்ச் போட்டால் இயங்குவது போன்றது அல்ல மனித வாழ்க்கை. 12 மணிநேர வேலை மசோதாவுக்கு தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சட்டப்பேரவையில் நான் பேசுவதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தபோது 12 மணி நேர வேலை மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்த்தார்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு; அது தான் ஸ்டாலினின் பண்பாடு.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். 30 ஆயிரம் கோடி தொடர்பான அந்த ஆடியோ விவகாரத்தில் மத்திய அரசு விசாரிக்க வலியுறுத்துவோம்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Edappadi k palaniswami says centre should probe on ptr palanivel thiagarajan audio

Best of Express