Advertisment

வெள்ள பாதிப்பு: அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறியதால் மக்கள் பாதிப்பு - இ.பி.எஸ் குற்றச்சாட்டு

அதிகனமழை குறித்து அதிகனமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தும், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறியதால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
EPS nellai flood

எடப்பாடி கே. பழனிசாமி

அதிகனமழை குறித்து அதிகனமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தும், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறியதால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாட்டங்களில் அதிகனமழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. அரசு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பாக மீட்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (19.12.2023) திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். சென்னையில் இருந்து விமான மூலமாக மதுரை வந்த எடப்பாடி பழனிச்சாமி சாலை மார்க்கமாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்றார். அங்கே பாளையங்கோட்டையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர், திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிகனமழை குறித்து அதிகனமழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தும், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறியதால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்மாவட்டங்களில் குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகனமழை பொழிந்து வருகிறது. ஏற்கெனவே, இந்திய வானிலை ஆய்வு மையம் 14.12.2023 அன்று தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகனமழை பொழியும் என்று செய்தி வெளியிட்டார்கள். அரசுக்கும் தெரிவித்தார்கள். ஊடகத்துக்கும் தெரிவித்தார்கள். ஊடகத்திலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளிவந்திருக்க்கின்றன. உனடியாக இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், அதிகனமழையால் இந்த 4 மாவட்ட மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு முழு காரணம், அரசு உரிய முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறியதுதான் என்பதை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் மக்களுடைய பாதிப்பை குறைத்திருக்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழை வருவதற்கு முன்பாகவே மக்களுக்கு எந்தெந்த பகுதியில் வானிலை ஆய்வு மையம் புயல், வெள்ளம், கனமழை செய்தி வெளியிடுகின்றதோ, அதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு அரசு உரிய முறையில் செயல்பட்டிருந்தால், சென்னை மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்தும் மக்களை மீட்டிருக்கலாம், இப்போது தென் மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கிற மழை வெள்ளத்தில் இருந்தும் மக்களைப் பாதுகாத்திருக்கலாம். ஆனால், விடியா தி.மு.க அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீர வசனம் பேசுகிறார்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்ட மக்கள் மழையால் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் மழை நீர் தேங்கியிருக்காது. மழை பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.

தூத்துக்குடியில் ஏற்கனவே 85 சதவிகித மழை நீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றிருந்தன. இரண்டரை ஆண்டுகளில் எஞ்சிய 15 சதவிகித பணிகளை தி.மு.க அரசு முடிக்கவில்லை. வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு உதவி வழங்க வேண்டும். மழை பாதித்த மாவட்டங்களில் மக்கள் உணவு இன்றி தவித்து வருகின்றனர். மழை பாதிப்பை ஆய்வு செய்யாமல் எப்படி நிவாரண தொகை கேட்க முடியும். இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவே மு.க ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். நாட்டை பற்றியே கவலைப்படாத முதல்-அமைச்சர்தான் மு.க ஸ்டாலின். குடிமராமத்து திட்டத்தை தி.மு.க அரசு கைவிட்டுவிட்டது. அதனால் தான் கனமழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment