/indian-express-tamil/media/media_files/2025/09/28/edappadi-palaniswami-press-meet-in-karur-2025-09-28-10-29-38.jpg)
எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆருதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற த.வெ.க விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர், 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆருதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததாகவும் இதுபோன்ற பொதுக்கூட்டங்களில் எவ்வளவு மக்கள் வருவார்கள் என்று எப்படி சமாளிப்பது என்று அக்கட்சி ஆலோசித்து செயல்பட்டிருக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும், “விஜய் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்பொது, த.வெ.க கொடி கட்டிய ஆம்புலன்ஸ் வருகிறது, ஏன் இவ்வளவு ஆம்புலன்ஸ் வருகிறது என்று விஜய் கேட்கிறார். இது எல்லாம் மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி புயலைக் கிளப்பியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “இதுவரை 39 பேர் இறந்துள்ளதாகவும் அரசு மருத்துவமனையில் 51 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் 2 பேர் அபாய கட்டத்தில் இருப்பதாகவும், தனியார் மருத்துவமனையில் 30 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளன.
இந்த பொதுக்கூட்டம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, எங்களுக்கு ஊடகத்தின் வாயிலாக கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், அங்கே மின்சார விளக்குகள் அணைந்ததாகவும் அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளின் காரணமாக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இது எல்லாம் செய்தி ஊடகங்களில் வெளி வந்தன.
த.வெ.க கூட்டம் அறிவிக்கப்பட்டு கூட்டம் நடைபெறுகின்றபோதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு முன்பு த.வெ.க 4 மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அங்கே மக்கள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை ஆய்வு செய்து அதற்கு ஏற்றவாறு அரசாங்கம் முழுமையான பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும்.
அதே போல, பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக தொலைக்காட்சிகளில் தெளிவாகத் தெரிகின்றன. ஏற்கெனவே, மாவட்டத்தில் நடந்த த.வெ.க பிரச்சாரக் கூட்டத்தில் முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதையெல்லாம் நான் தொலைக்காட்சிகளில் பார்த்து தெரிவிக்கிறேன்.
அதோடு, இந்தக் கட்சிக்கு மட்டுமல்ல, அ.தி.மு.க-வின் எழுச்சிப் பயணத்துக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கவில்லை. 3-4 மாவட்டத்தில் பாதுகாப்பு கொடுத்தார்கள், மீதி எந்த மாவட்டத்திலும் பொதுக்கூட்டம் நடைபெறுகின்ற இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் காவல்துறை அதை ஒழுங்குபடுத்துகிற பணியில் ஈடுபடவில்லை.
ஆளுங்கட்சியில், முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ, அமைச்சர்களோ பங்கேற்கிற பொதுக்கூட்டம் நடைபெறுகிறபோது ஆயிரக் கணக்கான காவலர்களை நியமிக்கிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார்கள். இந்த அரசாங்கம் ஒரும் தலைபட்சமாக நடைபெறுகிறது.
இதை ஆளுக்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் நடுநிலையோடு அரசாங்கம் செயல்பட வேண்டும். காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும்.
அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது பல்லாயிரக் கணக்கான போராட்டங்கள் நடைபெற்றிருக்கிறது. அத்தனை போராட்டங்களுக்கும் அனுமதி கொடுத்தோம், முழுமையான பாதுகாப்பு கொடுத்தோம். இப்படிப்பட்ட நிகழ்வுகள் எங்கள் ஆட்சியில் நடைபெறவில்லை. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு, கூட்டம் நடத்துவதே பெரிய சிரமம். நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெற்றுதான் கூட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அப்படி சூழ்நிலை இருந்தபோதும், நீதிமன்றம் முறையான பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் இந்த அரசும் காவல்துறையும் எதிர்க்கட்சி என்ற பார்வையில் முழுமையான பாதுகாப்பு கொடுப்பதில்லை. முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால், இந்த தள்ளுமுள்ளுவை சரிசெய்திருக்கலாம். இந்த உயிரிழப்புகள் ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம்.
அதோடு, அரசியல் கட்சிட் தலைவரும் அதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதற்கு முன் அவர் (விஜய்) 4 மாவட்டத்தில் சுற்றுப்பயனம் செய்திருக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் என்னென்ன குறைபாடு இருக்கிறது. அந்த குறைபாட்டை எப்படி சரி செய்ய வேண்டும் என்று ஆலோசனை பெற்று சரி செய்து அவர்களும் முன்னேற்பாடு அந்த கூட்டத்தை நடத்த வேண்டும்.
எல்லாம் விலை மதிக்க முடியாத உயிர்கள். ஒரு அரசியல் கட்சி பொதுக்கூட்டம் நடத்துகிறது என்றால், அந்த கட்சியின் பாதுகாப்பை நம்பி, அரசாங்கத்தை நம்பி, காவல்துறையை நம்பித்தான் பொதுமக்கள் கலந்துகொள்கிறார்கள். அரசாங்கமும் காவல்துறையும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அரசியல் கட்சியும் அதற்கு ஏற்றாற்போல நடந்துகொள்ள வேண்டும்.
காலையில் ஒரு நேரத்தைக் குறிப்பிடுகிறார்கள். அந்த குறிப்பிட்ட நேரத்தில் வந்து பொதுக்கூட்டத்தை நடத்தவில்லை. பல மணி நேரம் கழித்து வந்து பொதுக்கூட்டம் நடத்துகிறபோது அதிலே சில பிரச்னைகள் ஏற்படுகிறது. இதையெல்லாம் தவிர்க்க வேண்டும். நான் யாரையும் இந்த நேரத்திலே குற்றம் சுமத்துவது பொருத்தமாக இருக்காது. விலை மதிக்க முடியாத உயிர்களை இழந்திருக்கிறோம்.
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சி நடத்துகின்ற கூட்டத்தில் இவ்வளவு உயிரிழப்புகள் நடந்ததில்லை. தமிழகத்தில் நம்முடைய சகோதர சகோதரிகள் விலைமதிக்க முடியாதை உயிர்களை இழந்திருக்கிறார்கள். மிகுந்த அதிர்ச்சியும் வேதனைப்படுகிறேன்.
இதை இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்று பார்க்கவில்லை. பொதுமக்கள் என்ற கண்ணோட்டத்தோடு இதை நாங்கள் பார்க்கிறோம்.
தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் இருக்கிறது. அவர்களுக்கு பல பொதுக்கூட்டங்கள் நடத்திய அனுபவம் இருக்கிறது. ஒரு பொதுக்கூட்டம் நடத்தினால், அந்த மாவட்டத்தில் எவ்வளவு மக்கள் கூடுவார்கள், அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டால் எப்படி சரி செய்ய வேண்டும் என்ற அனுபவம் இருக்கும். அதை மற்ற தலைவர்களும் கடைபிடிக்க வேண்டும்” என்ற் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நேற்று நான் சென்னையில் இருந்தேன். இரவு 2 மணிக்குதான் வீட்டுக்கு வந்தேன். காலையில் இங்கே வந்துவிட்டேன். தொலைக்காட்சியில் பார்க்கிற செய்தியை வைத்துதான் இந்த பேட்டியை நான் கொடுக்கிறேன். அதுமட்டுமல்ல நான் வருகிறபோது கிடைக்கப்பெற்ற தகவல், விஜய் அந்தக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கிறபோதே இடையில் ஆம்புலன்ஸ் வருகிறது. த.வெ.க கொடிக் கட்டிக்கொண்டு இவ்வளவு ஆம்புலன்ஸ் எதற்கு வருகிறது என்கிறார். இது எல்லாம் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மயங்கி விழுகிறார்கள் என்று எப்படி ஆம்புலன்ஸ்காரர்களுக்கு தெரியும். கூட்டம் நடத்துபவர் மேலே இருக்கிறார். மேலே ஏறிப் பார்த்தால் எல்லாமே தெரியும். நானும் 173 தொகுதிக்கு போய் வந்திருக்கிறேன். மேலே இருந்து பார்த்தால் தெரியும். அப்படி அவர், எதற்கு இவ்வளவு ஆம்புலன்ஸ் வருகிறது என்று கேட்கிறார். அவர் அந்தக் கூட்டத்தில் பேசுவது தொலைக்காட்சியில் பார்த்தேன். இது எல்லாமே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதை எல்லாம் முழுமையாக விசார்க்கப்பட வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.