மழையால் நெல்மணிகள் வீணாகிறது: விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி; நெல் கொள்முதலில் தி.மு.க அரசு நாடகம் - இ.பி.எஸ் எச்சரிக்கை

வடகிழக்குப் பருவமழையால் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே வீணாகி வருவதாகவும், இது நேரடி நெல் கொள்முதலில் தி.மு.க அரசின் நிர்வாகக் குளறுபடிகளைக் காட்டுவதாகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

வடகிழக்குப் பருவமழையால் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே வீணாகி வருவதாகவும், இது நேரடி நெல் கொள்முதலில் தி.மு.க அரசின் நிர்வாகக் குளறுபடிகளைக் காட்டுவதாகவும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
edappadi palaniswami x22

மழையிலிருந்து நெல்லைப் பாதுகாக்கத் தேவையான தார்ப்பாய்களை வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். Photograph: (IE Tamil)

வடகிழக்குப் பருவமழையால் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே வீணாகி வருவதாகவும், இது நேரடி நெல் கொள்முதலில் தி.மு.க அரசின் நிர்வாகக் குளறுபடிகளைக் காட்டுவதாகவும் அ.தி.மு.க பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

Advertisment

மேலும், மழையிலிருந்து நெல்லைப் பாதுகாக்கத் தேவையான தார்ப்பாய்களை வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தி.மு.க அரசின் மோசமான நிர்வாகத்தால், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தமிழக விவசாயிகளுக்கு 'கண்ணீர் தீபாவளியாக' மாறியுள்ளது.

Advertisment
Advertisements

விவசாயிகள் விளைவித்த நெல்மணிகள் தற்போது பெய்து வரும் மழையில் முளைத்து வீணாகி வருகிறது. உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாததால், இது தி.மு.க அரசின் 'பெயிலர் மாடல்' நிர்வாகக் குளறுபடியைக் காட்டுகிறது.

உரத் தட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்ற சவால்களைக் கடந்து உற்பத்தி செய்த நெல்லை, உரிய நேரத்தில் கொள்முதல் செய்யக்கூட வக்கற்ற அரசாக தி.மு.க திகழ்கிறது.

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் ஒரு நாளைக்கு 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. ஈரப்பத அளவு 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

ஆனால், இப்போது ஸ்டாலின் மாடல் ஆட்சியில் ஒரு நாளைக்கு 600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும், சாக்குப்பைகள், தார்ப்பாய்கள் போதுமான அளவு இல்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும், கொள்முதலை 1,000 மூட்டைகளாக உயர்த்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

சட்டமன்றத்தில் இதுதொடர்பாக தான் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தபோது, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி முழுமையாக நெல்லைப் கொள்முதல் செய்வதற்கும், பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்காமல், ஒரு நாளைக்கு 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதாகச் சமாளித்து பேசுகிறார்.

22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்கலாமா என்று அமைச்சர் கேட்பது அவரது அறியாமையைக் காட்டுகிறது. ஏனெனில், இப்போதே நெல்மணிகள் அறுவடை செய்யப்பட்டு சாலையில் வீணாகி வருவதால், காலம் தாழ்த்துவதில் அர்த்தமில்லை.

'செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை' என்று உண்மைக்கு மாறாகப் பழி சுமத்துகிறார். கடந்த ஆகஸ்ட் 18 அன்றே மத்திய அரசு இதற்கான அனுமதியை வழங்கிவிட்டது, இதை மறைத்து தி.மு.க அரசு மக்களை ஏமாற்றுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சட்டமன்றத்தில் நெல் விளைச்சல் இந்த ஆண்டு அதிகம் என்று பேசிய அமைச்சருக்கு, அதுபற்றி முன்பே தெரியாதா? விளைச்சல் அதிகம் என்றால் அதற்கேற்ப முன்கூட்டியே கொள்முதல் தொடங்கியிருக்க வேண்டாமா? தேவையான கிடங்குகளை தயார் செய்திருக்க வேண்டாமா? மழையில் நனையாமல் பாதுகாக்க தார்ப்பாய் போன்ற அடிப்படை வசதிகளையாவது செய்து கொடுத்திருக்க வேண்டாமா? இவை எதையும் செய்யாமல், 'போட்டோஷூட்' நடத்துவதற்கும், பெயர் சூட்டுவதற்கும் மெனக்கெடுவதால் துயரம் தீராது.

டெல்டா மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் மூட்டை நெல்மணிகள் கொள்முதல் செய்யப்படாமல் சாலையில் குவித்து வைத்து மழையில் நனைந்து வீணாகி வருகிறது. மதுரை மாவட்டத்தில் 41 கொள்முதல் நிலையங்களைத் திறக்க உத்தரவிட்டும், இதுவரை ஒரு நிலையம் கூட திறக்கப்படவில்லை.

கடந்த 2021 முதல் 2023 வரை 1,968 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவிக்கும் நிலையில், தமிழக அரசின் குளறுபடியால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

எனவே, அதிக எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என்றும், அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் செய்தது போல தினமும் ஒரு நிலையத்திற்கு 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை மழையில் இருந்து பாதுகாக்கத் தேவையான தார்ப்பாய்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் அவர் தி.மு.க அரசை வலியுறுத்தினார்.

நெல் கொள்முதல் செய்யத் தவறினால், விவசாயிகள் மத்தியில் மிகப் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு, மாபெரும் போராட்டத்தை இந்த அரசு சந்திக்க நேரிடும் என்றும் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Edappadi K Palaniswami

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: