/indian-express-tamil/media/media_files/2025/07/08/eps-mettupalayam-cbe-2025-07-08-04-42-02.jpg)
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய நாயக்கன் பாளையத்தில் அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது. Photograph: (x/@EPSTamilNadu)
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்கிற சுற்றுப் பயணத்தை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திங்கள்கிழமை (08.07.2025)தொடங்கினார். வனபத்திரகாளி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சுற்றுப்பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய நாயக்கன் பாளையத்தில் அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது.: “2026 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற, பிரச்சாரம் மேற்கொள்ள கோவை மாவட்டத்தை தேர்வு செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றோம். 2026-ல் மக்கள் விரோத தி.மு.க ஆட்சி அகற்றப்படும். 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என மு.க. ஸ்டாலின் நினைக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இறுமார்பில் பேசிக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின். நீங்க ஆட்சியில் இருக்கலாம். கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க ஆட்சி நடைபெறுகின்றது. கோவை மாவட்டம் அ.தி.மு.க-வின் கோட்டை. எஃகு கோட்டையில் தி.மு.க நுழைய முடியாது.
தி.மு.க புறமுதுகிட்டு ஓடும் அளவிற்கு தேர்தல் பணியாற்ற வேண்டும்.
தி.மு.க செந்தில் பாலாஜிக்கு இங்கு 10 ரூபாய் பாலாஜி என பெயர் வைத்திருக்கின்றனர். ஊழலுக்காக சிறை சென்றவர் தி.மு.க-வின் தேர்தல் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி.
உச்ச நீதிமன்றத்தின் கேள்வியால் அமைச்சர் பதவியை இழந்தவர். நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்ற கட்சி அ.தி.மு.க. லஞ்சம் இல்லாமல் இந்த ஆட்சியில் எதுவும் இல்லை. ஊழல் செய்கின்ற அரசு உங்களுக்கு வேண்டுமா? ஊழல் செய்யும் தி.மு.க அரசை அகற்றும் அரசாக நாம் இருக்க வேண்டும். மன்னராட்சி தமிழகத்தில் வர கூடாது. தி.மு.க குடும்பம் மன்னராட்சி செய்கின்றது. வாரிசு அரசியலுக்கு முற்றுபுள்ளி வைக்கின்ற தேர்தலாக இருக்க வேண்டும்.
நான் கீழே இருந்துதான் இந்த இடத்திற்கு வந்து இருக்கின்றேன்.கருணாநிதி குடும்பத்தை போல குடும்ப ஆட்சி அ.தி.மு.க-வில் இல்லை.
மத்தியில் ஆட்சி அமைந்தாலும் மாநிலத்தில் இருந்தாலும் கருணாநதி குடும்பத்தினர்தான் பொறுப்பில் வருகின்றனர்.
ஸ்டாலினுக்கு பின்பு உதயநிதி ஸ்டாலின் வருவராம். இன்பநிநி வந்தாலும் ஏற்று கொள்கின்றோம் என்கின்றனர். அப்படிபட்ட கட்சி ஆட்சிக்கு வர வேண்டுமா? யாரும் அதில் சுதந்திரமாக செயல்பட வில்லை.
கப்பம் கட்டுபவர்களுக்கு அந்த கட்சியில் மரியாதை. அவர்களை
ஓட ஓட விரட்டி அடிக்க போகின்றனர். கோவை மாவட்ட மக்கள் தன்மானம் உள்ள மக்கள். இப்படிப்பட்ட கொள்ளை கும்பல் இந்த மாவட்டத்தில் நுழைந்து இருக்கின்றது. அவர்களை ஓட ஓட விரட்டியடியுங்கள்.
அ.தி.மு.க ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை என ஸ்டாலின் சொல்கிறார். அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட பாலத்தை ஸ்டிக்கர் ஓட்டி திறந்து வைத்து விட்டு பேசுகிறார் ஸ்டாலின்.
சிறு, குறு நடுத்தர தொழில்கள் மின்கட்டண உயர்வால் நலிவடைந்து இருக்கின்றது. மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமையும் . அப்போது தொழில்களுக்கு தேவையானதை செய்வோம்.
மத்திய அரசு நிதியை தரவில்லை என பொய்யான செய்தியை தி.மு.க சொல்லிக்கொண்டு இருக்கிறது. மத்திய அரசை அவதூறாக பேச காரணம் தேர்தல் வருவதுதான்.
உரிமை தொகை குறித்து பல முறை நான் பேசினேன். அதன் பின்புதான் 28 மாதம் கழித்து தகுதியானவர்களுக்கு கொடுத்துள்ளார். மக்களிடையே தி.மு.க-விற்கு செல்வாக்கு போய்விட்டது. இப்போது உரிமை தொகை கொடுப்பதாக சொல்கின்றனர். மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக கொடுக்கின்றனர்.
நாங்களும் உரிமை தொகை கொடுப்பதாக சொன்னோம்.நீங்க கேட்கலை. 1500 ரூபாய் குடும்ப தலைவிக்கு கொடுப்பதாக எங்கள் தேர்தல் சொன்னோம். கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. மற்ற மாவட்டத்தில் வாய்ப்பு அமையவில்லை.
அ.தி.மு.க போட்டியிட்டால் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள.
கூட்டணி கட்சி போட்டியிட்டால் அவர்களுக்கு வாக்களியுங்கள். நமது போராட்டத்தை வரலாறு சொல்லும் அதுவே வெல்லும்.” என எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “2026 இல் நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தல் ஸ்டாலின் கணக்கு போடுகிறார் 200 தொகுதிகளில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிகள் வெற்றி பெறும் என்று திரு ஸ்டாலின் அவர்களே இங்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் பெரியநாயக்கன்பாளையத்தில் வந்து பாருங்கள் மக்கள் வெள்ளம் கடல் போல் காட்சி அளிக்கின்றது. இங்கே இருக்கின்ற எழுச்சி தான் வெற்றியின் அடித்தளம் ஏதோ நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றதாக இறுமாப்பில் ஸ்டாலின் பேசிக் கொண்டு இருக்கிறார் ஸ்டாலின் அவர்களை 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றீர்கள் அடுத்து வந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா தி.மு.க தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி கோவை மாவட்டத்தில் 10 இடங்களிலும் வெற்றி பெற்றது மறந்து விடாதீர்கள் நீங்கள் ஆட்சியில் வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் கோவை மாவட்டத்தில் அண்ணா தி.மு.க ஆட்சி நடக்கிறது.
உங்கள் கட்சிக்காக கூட்டணிக்க ஒரு இடம் கூட கிடைக்கவில்லை நாடாளுமன்றம் வேறு சட்டமன்றம் வேறு சட்டமன்றம் என்று வருகின்ற போது அண்ணா தி.மு.க தான் ஆட்சி அமைக்கப் போகிறது கவுண்டம்பாளையம் தொகுதி அண்ணா தி.மு.க வின் கோட்டை மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் இருப்பவர்களும் கலந்து கொண்டு இருக்கிறீர்கள் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியும் அண்ணா தி.மு.க வின் கோட்டை
கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளும் அண்ணா தி.மு.க வின் கோட்டை இந்த இயக்கு கோட்டையில் தி.மு.க நுழையவே முடியாது நுழைய விடுவீர்களா தி.மு.க வினரை நுழைய விடுவீர்களா
இந்த சட்டமன்றத் தேர்தல் என்ற போரில் திமுகவை ஓட ஓட பிற முதுகு எட்டு ஓடும் அளவிற்கு நீங்கள் தேர்தல் பணி ஆற்ற வேண்டும் அது மட்டுமல்ல இங்கு ஒருவரை தி.மு.க பொறுப்பாளராக போட்டி இருக்கிறார்கள் யார் ? அவர்
பாலாஜி அவருக்கு பெயர் என்ன வைத்து உள்ளார்கள் பத்து ரூபாய் பாலாஜி அவரைத் தான் இங்கு பொறுப்பாளராக போட்டு இருக்கிறார்கள்.” என்று பேசினார்.
இடையில் ஆம்புலன்ஸ் வந்தபோது ஆம்புலன்ஸுக்கு வழி விடுங்கள் என்றார்.
பின்னர், தொர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: “ஊழல் செய்து சிறைக்குப் போனவர் தான் இங்கு தேர்தல் பொறுப்பாளர்.
சிந்தித்து பாருங்கள் உச்ச நீதிமன்றம் என்ற கேள்வி கேட்கிறது திமுக அமைச்சராக இருக்கின்ற திரு செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி கேட்கிறது நீ சிறைக்குப் போக வேண்டுமா ? அல்லது அமைச்சராக வேண்டுமா ? என்று அவரும் வாய்தா மேல் வாய்தா கேட்டு பார்த்தார் ஆனால் உச்சநீதிமன்றம் விடவில்லை இறுதியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அப்படி ஊழல் செய்த ஒருவர் உங்களுக்கு மாவட்ட பொறுப்பாளராக போட்டு இருக்கிறார்கள் சிந்தித்துப் பாருங்கள்
நாட்டு மக்களுக்கு நல்லது செய்கின்ற கட்சி அ.தி.மு.க ஆட்சியில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது. எந்த துறைகளிலும் லஞ்சம், லஞ்சம் இல்லாமல் எந்த காரியமும் நடைபெறுவதில்லை கமிஷன் கலெக்சன் கரப்ஷன் அதில் நம்பர் ஒன் தி.மு.க ஆட்சி. இப்படி ஊழல் செய்யும் தி.மு.க ஆட்சி மீண்டும் வேண்டுமா ? ஊழல் செய்கின்ற ஆட்சி வேண்டுமா ? ஆக 2026 இல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஊழல் செய்கின்ற தி.மு.க அரசாங்கத்தை அகற்றுகின்ற தேர்தலாக இருக்க வேண்டும்
#மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம் என்ற தீர்க்கமான இலட்சியத்துடன் நான் மேற்கொண்டுள்ள எழுச்சிப்பயணத்தின் முதல் நாளான இன்று, மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் தொகுதி மக்களின் பேரன்பில் திளைத்தேன்.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) July 7, 2025
கடல் போல் காட்சியளித்த மக்கள் வெள்ளத்தின் இன்றைய எழுச்சிக்குரல், 2026-ல்… pic.twitter.com/SSAARGP3Ql
தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சி வருவதற்கு ஆட்சி என்றால் மன்னராட்சி குடும்பம் தி.மு.க ஆட்சி என்பது மனராட்சி குடும்பம் வாரிசு அரசியலுக்கும் குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல் 2026 சட்டமன்ற தேர்தல்.
உங்கள் குடும்பத்தினர்தான் முதலமைச்சராக வேண்டுமா? இங்க இருப்பவர்கள் முதலமைச்சரானால் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா ? நானும் உங்களை போல் தான் கீழ் இருந்து வந்து இருக்கிறேன். உங்களோடு கூட இருக்கிறேன் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருக்கின்றேன் கஷ்டம் நஷ்டம் துன்பம் துயரம் வேதனை அனைத்தையும் அனுபவ ரீதியாக அனுபவித்தவன்
ஆகவே கருணாநிதி குடும்பத்தை போல குடும்ப ஆட்சி இல்லை எனவே குடும்ப ஆட்சி போல் இல்லாமல் அடுத்த ஆண்டு தேர்தல் அமைய வேண்டும்.
மத்தியில் ஆட்சி அமைத்தாலும், குடும்ப உறுப்பினர்கள் தான் ஆட்சியில் இருக்க வேண்டும் மாநிலத்திலும் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார் ஸ்டாலின் வந்து விட்டார் இப்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் பொறுப்பேற்று
தி.மு.க அமைச்சர் ஒருவர் சொல்கிறார் தி.மு.க குடும்ப கட்சி தான் நாங்கள் கருணாநிதி குடும்பத்திற்கு கட்டுப்பட்டவர்கள் ஸ்டாலினை முதலமைச்சராக சொல்வோம் உதயநிதியை ஏற்றுக்கொள்வோம் இன்பநதி முதலமைச்சர் ஆனால் ஏற்றுக் கொள்வோம் என்கிறார் அவர்கள் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்து விட்டார்கள் அங்கு சுதந்திரம் இல்லை கருணாநிதி குடும்பத்தை புகழ்ந்தால் தான் பதவியில் நீடிக்க முடியும் என்கிற நிலைமை தி.மு.க வில் உள்ளது. அப்படிப்பட்ட ஆட்சி வர வேண்டுமா ?
அங்கு யாரும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை மேலிடத்திற்கு அதிகம் யார் கப்பம் கட்டுகிறார்களோ அவர் தான் சிறந்த அமைச்சர் இங்கு வந்து இருக்கிற பொறுப்பு அமைச்சர் சிறப்பாக கப்பம் கட்டுவதால் தான் கோவைக்கு பொறுப்பாக போட்டு இருக்கிறார்கள்
அவர்கள் வருவார்கள் அவர்களை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும் கொள்ளை அடித்த பணத்தை வைத்து மக்களை விலைக்கு வாங்க பார்க்கிறார்கள்.
கோவை மாவட்ட மக்கள் தன்மானம் உள்ள மக்கள் நாம் அனைவரும் தன்மானம் உள்ள மக்கள் நாடு நலமாக இருக்க வேண்டும்.
நாட்டில் தொழில் வளம் பெருக வேண்டும் வேளாண்மை பெருக வேண்டும் மக்கள் சுபிட்சமாக இருக்க வேண்டும் என நினைக்கும் மக்கள் இங்கு வாழ்கின்ற கோவை மாவட்ட மக்கள்
இப்படிப்பட்ட கொள்ளை அடித்த கொள்ளை கும்பல் மாவட்டத்திற்குள் நுழைந்து இருக்கிறது திருடர்கள் ஜாக்கிரதை என்று போடுவார்கள் அப்படி இங்கே வருகின்றவர்கள் தொல்லை அடைத்த திருடர்களாக வருவார்கள் மறந்து விடாதீர்கள் அவர்களை ஓட ஓட விரட்டி அடியுங்கள்
2011 முதல் 21 வரை அ.தி.மு.க சார்பில் சிறப்பான ஆட்சியை தந்தோம் மூன்றாம் குடிநீர் திட்டத்தை கோவை மாவட்டத்திற்கு கொண்டு வந்தோம் நிறைய பாலங்கள் கொண்டு வந்தோம் பாலத்திற்கு கீழ் தான் இன்று பேசிக் கொண்டு இருக்கிறோம் ஸ்டாலின் சொல்கிறார் அ.தி.மு.க ஆட்சியில் ஒன்றுமே செய்யவில்லை என்று இந்த பாலத்திற்கு கீழே இருக்கிற தான் பேசிக் கொண்டு இருக்கிறோம் இந்த பாலமே அண்ணா தி.மு.க ஆட்சிக்கு சாட்சி
அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட பாலத்தை ஸ்டிக்கர் ஒட்டி ஸ்டாலின் இங்கு திறந்து வைத்து விட்டார். மின் கட்டண உயர்வால் சிறு குறு நடுத்தர தொழில்கள் நலிவடைந்து விட்டது. தொழில் சிறக்க மீண்டும் அம்மா ஆட்சி வர வேண்டும்
பா.ஜ.க வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்து விட்டது என்கிறார்.
16 ஆண்டு காலம் தி.மு.க வைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்தார்கள் காங்கிரஸ் ஆட்சியிலும் பாரதிய ஜனதா ஆட்சியிலும் அமைச்சர்களாக இருந்தார்கள். அப்போது ஏன் ? நிதிகளைப் பெற்று மக்களுக்கான திட்டங்களை கொண்டு வரவில்லை ஏன் ? மத்தியில் உள்ள ஆட்சியாளர்களை பேசுகிறீர்கள் அதற்கு காரணம் 2026 தேர்தல் வருகிறது அதை நோக்கி திட்டமிட்டு பொய் பிரச்சாரத்தை அவதூறான பிரச்சாரத்தை பரப்பி வருகிறார்கள்.
ஆட்சி அதிகாரம் இருக்கும் பொழுது தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்து இருக்கலாம் எதையும் செய்யவில்லை அவரது வீட்டு மக்களுக்கு வீட்டின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் வேண்டும் என்பது தான் கருணாநிதி குடும்பத்தின் நோக்கம் மக்களை பற்றி கவலை இல்லை வீட்டு மக்களை பற்றி கவலைப்படுகின்ற ஒரே குடும்பம் ஸ்டாலின் குடும்பம்.
அது மட்டுமல்ல தி.மு.க ஆட்சி அமைத்து 50 மாத காலம் ஆகிறது. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்ற முடியவில்லை எங்கு பார்த்தாலும் ஸ்டாலின் பேசுகிறார். மக்களுக்கு உரிமை தொகை கொடுத்தது என்று எப்போது கொடுத்தாய் பலமுறை சட்டமன்றத்தில் பேசினேன் ஒருமுறை இருமுறை அல்ல பலமுறை வாய்ப்பு கிடைக்கின்ற பொழுதெல்லாம் தேர்தல் அறிக்கையில் திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி பெண்கள் குடும்பத்தை ஏமாற்றும் வாக்குறுதிகளை காக்க வேண்டும் என்று கூறுகிறார்.
தி.மு.க ஆட்சி ஏற்று 28 மாதங்களுக்கு பிறகு தான் தகுதியானவர்களுக்கு மாதம் தோறும் அறிவித்தார் பொது மக்களிடத்தில் செல்வாக்கு போய்க் கொண்டு இருக்கிறது.
இன்னும் எட்டு மாதம் தான் தேர்தலுக்கு இருக்கிறது இன்னும் 28 லட்சம் பேருக்கு கொடுக்க வேண்டும் அவர்களுக்கு ஏன் கொடுக்கவில்லை அதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் மக்களுக்கு பலன் கொடுப்பதற்காக கொடுக்கவில்லை தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் கொடுத்து இருக்கிறார்கள் அ.தி.மு.க அப்படி அல்ல மக்களுக்கு நன்மை செய்கின்ற கட்சி.” என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.