Edappadi K Palaniswami | aiadmk: இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும் என்பது விதி ஆகும். அந்த வகையில், அ.தி.மு.க செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த செயற்குழு-பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது பின்வருமாறு:
அ.தி.மு.க பொதுச்செயலாளராக என்னை தேர்ந்தெடுத்த கட்சி தலைமை நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி அ.தி.மு.க. உயிரோட்டம் உள்ள அ.தி.மு.க-வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. தமிழ்நாட்டில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி அ.தி.மு.க.
எதிரிகள் அஞ்சும் அளவுக்கு மதுரை மாநாட்டை நடத்தினோம். அ.தி.மு.க மாநாட்டால் மதுரை நகரமே குலுங்கியது. மதுரையில் நடந்த அ.தி.மு.க மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்றனர். அ.தி.மு.க மாநாட்டை பற்றி விமர்சனம் செய்ய உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை.
அளவு கடந்த சோதனை மற்றும் வெற்றியை பார்த்தது அ.தி.மு.க தான். எதிரிகளை சட்ட நுணுக்கத்தோடு கையாள வேண்டும். கைகோர்த்து செயல்பட்ட எதிரிகள், துரோகிகளை அ.தி.மு.க வென்று காட்டியது. அ.தி.மு.க இனி ஜெட் வேகத்தில் செயல்படும்.
தி.மு.க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. தி.மு.க ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. போதைப்பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த தி.மு.க அரசு தவறி விட்டது. தி.மு.க அரசின் இறங்கு முகம் தொடங்கிவிட்டது. 520 தேர்தல் வாக்குறுதிகளையும் தி.மு.க நிறைவேற்றவில்லை. நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு பின்னும் அமைச்சரை பதவி நீக்கம் செய்யாதது சரியில்லை.
நாடாளுமன்ற தேர்தலுக்குள் யார், யார் எங்கிருக்க வேண்டுமோ அங்கு இருப்பார்கள். கொரோனா தொற்று காலத்தில் அ.தி.மு.க சிறப்பாக செயல்பட்டது. அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க தான் வெற்றி பெறும். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தது அ.தி.மு.க.தான்.
பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம். மத்தியில் யார் ஆட்சி செய்தாலும் தமிழகத்தை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தான் நடத்துகிறார்கள். தமிழக அரசு கேட்கும் எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கியது இல்லை என்ற வரலாறு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள். #பொதுக்குழுவில்_புரட்சித்தமிழர் #அஇஅதிமுக_பொதுக்குழு pic.twitter.com/Hsqxt5xedh
— AIADMK (@AIADMKOfficial) December 26, 2023
மன்னாதி மன்னன் எம்ஜிஆர் இருக்கின்ற வரை திமுகவினால் எழுந்திரிக்க முடியவில்லை ! 😎🔥
— AIADMK NEWS (@NEWSAIADMK) December 26, 2023
#பொதுக்குழுவில்_புரட்சித்தமிழர் #அஇஅதிமுக_பொதுக்குழு pic.twitter.com/oVbppwH6S3
நல்ல முறையில கேட்டாலே மத்திய அரசு கொடுக்காது.. நீ போற போக்குல கேட்டா எப்படி கொடுக்கும்?!
— Gowri Sankar D (@GowriSankarD_) December 26, 2023
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள்!#பொதுக்குழுவில்_புரட்சித்தமிழர்#அஇஅதிமுக_பொதுக்குழு pic.twitter.com/U3luvQNJ49
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.