/indian-express-tamil/media/media_files/2025/09/30/eps-felix-gerald-2-2025-09-30-20-08-14.jpg)
கரூரில் விஜய்யின் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக தவறான தகவல்கள் மற்றும் வதந்தி பரப்பியதாக ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர், யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு செவ்வாய்க்கிழமை காலை சைபர் கிரைம் போலீசாரல் கைது செய்யப்பட்டார்.
கரூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் சனிக்கிழமை (27.09.2025) உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, த.வெ.க கரூர் மாவட்ட நிர்வாகிகள் மதியழகன், பவுன்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அக்கட்சியின் தேர்தல் பரப்புரை வியூக வகுப்பாளர் பொதுச் செயலாளர் ஆதவ் ஆர்ஜுனா ஆகியோர் மீடு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் மற்றும் வதந்தி பரப்பியதாக 23 பேர் பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அந்த வகையில், கரூரில் விஜய்யின் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக தவறான தகவல்கள் மற்றும் வதந்தி பரப்பியதாக ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர், யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு செவ்வாய்க்கிழமை காலை சைபர் கிரைம் போலீசாரல் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், “ஸ்டாலின் அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களுக்கு சிறை தான் பரிசு. இது ஒன்றும் புதிதல்ல” என்றும் பத்திரிகையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பத்திரிகையாளர் திரு. பெலிக்ஸ் ஜெரால்டு அவர்கள் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையால் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) September 30, 2025
ஸ்டாலின் அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களுக்கு சிறை தான் பரிசு. இது ஒன்றும் புதிதல்ல.
தற்போது கரூர் துயரத்தில் திமுக அரசு…
இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: “பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு அவர்கள் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையால் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஸ்டாலின் அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களுக்கு சிறை தான் பரிசு. இது ஒன்றும் புதிதல்ல.
தற்போது கரூர் துயரத்தில் தி.மு.க அரசு மீது மக்கள் எழுப்பும் சந்தேகங்களை வெளிப்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
மக்களிடையே நிலவும் குழப்பங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது பத்திரிகையாளர் கடமை. அதைத் தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை.
மாறாக, பாசிசப் போக்குடன், கேள்வி கேட்கும் பத்திரிகையாளரை கைது செய்வது கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல்கள் தான் இன்னும் அரசியல் சந்தேகங்களை மக்களிடையே வலுப்பெறச் செய்யும்.
பத்திரிகையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஸ்டாலின் மாடல் தி.மு.க அரசை வலியுறுத்துகிறோம்.” என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.