சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது பிறந்தநாள் மற்றும் 61வது குருபூஜை விழாவை முன்னிட்டு, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் தேவர் நினைவிடத்தில் அக்டோபர் 30-ம் தேதி அஞ்சலி செலுத்துகிறார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பசும்பொன் வருகை தரும் எடப்பாடி பழனிசாமி, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தேவர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், 'தேவர் ஜெயந்தி'யில் கலந்துகொண்டனர். அதன் பிறகு, 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியைத் தழுவியதை அடுத்து, குறிப்பாக தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அவமானகரமான தோல்விக்குப் பிறகு, 2021-ல் ஓ.பி.எஸ் உடன் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து நடந்த கடும் நீதிமன்ற போராட்டத்துக்கு இடையே, கடந்த ஆண்டு சென்னையில் உள்ள தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்தார்.
தேவர் ஜெயந்தியின் போது முத்துராமலிங்கத் தேவர் சிலையை அலங்கரிக்க ஜெயலலிதாவால் நன்கொடையாக அளிக்கப்பட்டு வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்கக் கவசத்தை, பழனிசாமி தலைமையிலான தரப்பினர் பொறுப்பில் வெளியே எடுக்க கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து அ.தி.மு.க-வினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அ.தி.மு.க பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு கூட்டு வங்கிக் கணக்கு தொடங்கவும், தேவர் ஜெயந்தியின் போது ஜெயலலிதா அளித்த தங்கக் கவசத்தை வைத்துக்கொள்ளவும் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து, முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாளில், ராமநாதபுரம் மாவட்டம், பொசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக எடப்பாடி பழனிசாமி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன் வருகை தர உள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கை தென் தமிழகத்தில் பெரும்பான்மை வாக்கு வங்கியைக் கொண்டுள்ள தேவர் சமூகத்தின் வாக்குகளை ஈர்க்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க-வின் மற்ற தலைவர்களையும் திரளாகக் கலந்துகொண்டு தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க பொதுச் செயலாளராகப் பதவியேற்றபின், பசும்பொன்னுக்கு அக்டோபர் 30-ம் தேதி வருகை தருகிறார்.
அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன் வருகை தரும் எடப்பாடி பழனிசாமி அன்று காலை 10 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் இந்த திட்டம், தென் தமிழகத்தில் செல்வாக்கு மிக்க ஓ.பி.சி சமூகமான தேவர் சமூகத்தை ஈர்ப்பதற்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க-வின் 52-வது ஆண்டு விழாவைக் கொண்டாடிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2024 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் அமையும் கூட்டணியை வழி நடத்துவார் என அறிவித்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார். தி.மு.க ஆட்சி மீது மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதால், 2026-ல் அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.