மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க் அவெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு அ.தி.மு.க மற்றும் எனது சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், நடைபெற்ற 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அதற்கு பிறகு, 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அமைத்தது.
இந்த சூழலில், பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலைய் தொடர்ந்து, அ.தி.மு.க தலைவர்களை விமர்சனம் செய்தார். இதனால், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உடைந்தது.
இதைத் தொடந்து, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிந்து இரு கட்சிகளும் தனித் தனியாக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. 2024 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க இரு கட்சி தலைமையிலன கூட்டணிகளும் தொல்வி அடைந்தன. தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. வாக்கு எண்ணிக்கையில், பா.ஜ.க 10 தொகுதிகளில் அ.தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தைப் பிடித்தது.
அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி அமைத்திருந்தால், 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம், கூட்டணி அமையாததற்கு அண்ணாமலையே காரணம் என்றும் அப்படி வெற்றி பெற்றிருந்தால், மோடி ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை எளிதாகக் கிடைத்திருக்கும் என்று அ.தி.மு.க - பா.ஜ.க இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
இந்த நிலையில், மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“இந்திய நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்க உள்ள நரேந்திரமோடி அவர்களுக்கு அ.தி.மு.க மற்றும் எனது சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், என்.டி.ஏ தலைவராக நரேந்திர மோடியை பா.ஜ.க மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். அதை அனைவரும் வழிமொழிந்து நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதைத் தொடந்து, நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உரிமை கோரினார். பாஜக கூட்டணி அரசு நாளை மறுநாள் ஜூன் 9-ம் தேதி இரவு 7.15 மணிக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்க உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“