ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, இன்று முதல் ஜனவரி 26-ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு விருப்பமனு அளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அதிமுக சார்பில் வேட்பாளாராக போட்டியிட விரும்பும் உடன்பிறப்புகள், தலைமைகழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், மாளிகையில் ஜனவரி 23ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் ஜனவரி 26ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கலாம் என்று அறிவித்துள்ளனர்.
விண்ணப்ப கட்டணத்தொகையாக ரூ.15,000 செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, மா.செ.மனோகரன், ஜெகதீசன் ஆகியோர் விருப்பமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தலுக்கு வரும் ஜனவரி 31-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளது. விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளியாகப் பூர்த்தி செய்து உடனடியா வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.