பகிரங்கமாக அழைப்பு விடுத்த மோடி.. எடப்பாடி, ஸ்டாலின் ரியாக்‌ஷன்ஸ் இதுதான்!

தமிழக அரசியல் தலைவர்களிடம் இருந்து பதில்கள் வரத்தொடங்கியுள்ளன.

வாஜ்பாய் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட கூட்டணி தர்மம் என்ற பெ்யரில், தமிழக கூட்டணிக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடியின் அழைப்புக்கு தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பதில் கூறியுள்ளனர்.

எடப்பாடி, ஸ்டாலின் ரியாக்‌ஷன்ஸ்:

ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், அரக்கோணம் ஆகிய 5 மக்களவை தொகுதி நிர்வாகிகளுடன் காணொலியில்  கடந்த 10 ஆம் தேதி மோடி பேசினார். அதில் அவர் மக்களவை தேர்தல் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட கூட்டணி தர்மம் கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், பழைய நண்பர்கள் உள்பட அனைவருக்கும் கதவுகள் திறந்திருப்பதாக மோடி தமிழக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். மோடியின் இந்த அழைப்பு அதிமுக மற்றும் திமுக -விற்கு என விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்த  அழைப்புக்கு தற்போது தமிழக அரசியல் தலைவர்களிடம் இருந்து பதில்கள் வரத்தொடங்கியுள்ளன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி:

தமிழக மக்களுக்கு நன்மை செய்கின்றவர்களே மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும். அவர்களுக்கே தங்களது ஆதரவு  என்று திட்டவட்டமாக கூறினார்.மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு உரையாற்றிய எடப்பாடி இத்தகைய கருத்தை பதிவு செய்தார்.

மு.க ஸ்டாலின்:

ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மோடி தலைமையிலான பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். சரியான மனிதர், தவறான கட்சியில் இருந்தார் என்று, வாஜ்பாய் குறித்து, கருணாநிதி குறிப்பிட்டிருந்ததை நினைவுபடுத்தியுள்ள, ஸ்டாலின் மோடி, வாஜ்பாய் கிடையாது என்றும் கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close