அ.தி.மு.க.,வில் ஐந்து மாவட்டங்களுக்கு புதிய மாவட்டச் செயலாளர்களையும், கட்சியின் அமைப்புச் செயலாளர்களாக 6 பேரையும் நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், கட்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு சட்டமன்ற தொகுதிகளை பிரித்து, புதிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்தும், கட்சியில் 6 பேரை அமைப்புச் செயலாளர்களாக நியமனம் செய்தும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளாராக ஜெ.சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட செயலாளராக இளம்பை தமிழ்ச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக ராம. ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலளாராக சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கும் புதிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மாநில பொறுப்புகளுக்கும், கட்சியின் பிற அணிகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஜி.பாஸ்கரன், அன்வர் ராஜா, ஆர்.மனோகரன், வி.ராமு, ராயபுரம் மனோ, துரை செந்தில் உள்ளிட்டோர் கட்சியின் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. கொள்கை பரப்பு இணை செயலாளராக விந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் புதுச்சேரி மாநிலத்திலும் பல்வேறு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“